ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சரக்குகள் அனுப்பப்படுகின்றன. இந்த இரு போக்குவரத்திலும் காற்று மாசு ஏற்படுகிறது. இதில் ரயில் போக்குவரத்தில் குறைந்தளவே கரியமில வாயு வெளியீடு இருப்பதாக சக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது ரயில் போக்குவரத்தில் ஒரு டன் கிமீ - க்கு 0.009 கிலோகிராம் கரியமில வாயு வெளியீடு மட்டுமே உள்ளது.
ஆனால் சாலைப் போக்குவரத்தில் 0.040 கிலோகிராம் கரியமில வாயு வெளியிடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சரக்கு போக்குவரத்திற்கு ரயிலை தேர்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பசுமை புள்ளிகள் வழங்கப்படுகின்றன. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் ரயில் போக்குவரத்தின் வாயிலாக மேலும் மேலும் சரக்குகளை அனுப்ப வாடிக்கையாளர்களுக்கு இது "நலம் விரும்பும் காரணி" உதவியாக இருக்கும். இந்த பசுமை புள்ளிகள் சரக்கு ரயில் பெட்டிகளை இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக வளர்ச்சி இணைய தளம் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
இணையதளத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் பதிவு செய்யும்போதே சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி என செய்தி வெளியாகும். சுற்றுச்சூழல் மோசமாகி வரும் நிலைமையில் அது குறைப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும் சாலை சரக்கு வாகனங்கள் மொத்தமாக அப்படியே ரயில்கள் ஏற்றி "ரோல் ஒன் - ரோல் ஆப்" முறையின் வாயிலாக ரயில்களில் கொண்டுசெல்லும் வசதியும் நடைமுறையில் உள்ளது. இந்த "ரோல் ஆன் ரோல் ஆப்" முறையில்தான் கொரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் லாரிகள் ரயில் மூலம் அனுப்பப்பட்டன.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கரும்பு ஜூசை வெறுப்பவர்களா நீங்க...! - உங்க ஒப்பீனியன சீக்கிரம் மாத்திக்கோங்க...!