கடுமையான வெயிலில் காய்ந்து, தீஞ்சு அலைந்து கொண்டிருக்கும்போது எங்கோ ஒரு மூளையில் விற்றுக் கொண்டிருக்கும் கரும்பு ஜூஸ் கடைய பாத்து அன்னாச்சி ஒரு ஜீஸ் போடுங்க அப்டினு சொல்லிட்டு வெயில்லருந்து கடையோர நிழல்ல கொஞ்சம் இளைப்பாறி அவர் கொடுக்குற  கடும்பு ஜீஸ்ச அருந்தும்போது கிடைக்கும் சுகத்திற்கு ஈடு இணையே இல்லை.  வழக்கமா கோடைகாலமுனு சொன்னாலே ஏப்ரல், மே மாதங்கள்தான் ஆனா இப்ப இருக்க பருவ நிலை மாற்றம் காரணமா கொஞ்சம் முன் கூட்டியே கோடை வெயிலின் தக்கம் அதிகமாகிருச்சு. வெயில்ல சுத்திட்டு இருக்கப்போ தாகத்துக்கு எதாவது ஒரு கூல்டிரிங்ஸ் சாப்பிடனும்னு கடைய தேடுவோம் அப்டி தேடும்போதுதான்  சாலையோரங்கள்ல இருக்குற இந்த கரும்பு ஜீஸ் கடைய நிறைய பேர் பார்போம், கடந்து செல்வோம். நிறைய பேர் சாதாரணமாக தாகத்திற்காக இந்த கரும்பு ஜீஸ்ச அருந்திவிட்டுக் கடந்து செல்கிறோம்.




பொதுவாக என்னதான் கரும்பு ஜூஸை எல்லோரும் பருகும்போது ஒரு கும்பல் மட்டும் கரும்பு ஜீஸை தவிர்ப்பாங்க. அவங்கதான் டயட் ஃபாலோவர்ஸ். அதிக அளவிலான சர்க்கரை கரும்புச் சக்கையில் இருக்கிறது என்கிறது உண்மைதான் என்றாலும் அது உடல் பருமனை அதிகரிக்கும் என்பது மூடநம்பிக்கையே. இதில் உள்ள இயற்கையான சர்க்கரை புரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகமாகக் கொண்டுள்ளது.




அதுமட்டுமன்றி 300 மில்லி கரும்புச் சாறில் 111 கலோரிகள் நிறைந்துள்ளன. அதேபோல் உடலில் எங்கெல்லாம் கொழுப்பு அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் கரையும் அதிசயத்தைக் காணலாம். இது உங்கள் மெட்டாபலிசத்தை அதிகரித்து உடனடி ஆற்றலை அளிக்கும். ஜீரண சக்திக்கு எளிய மருந்து கரும்புச் சாறு . இதில் ஜீரண சக்திக்கு உதவும் நார்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாகும் வாய்ப்பு உள்ளது.




கரும்புச் சாறோடு சேர்க்கப்படும் இஞ்சியும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு மிக முக்கியம் எலக்ட்ரோலைட்ஸ். இவை இளநீர், குளுக்கோஸ் போன்ற பானங்களுக்கு அடுத்ததாக கரும்புச் சாறில் அதிகமாக உள்ளன. இது உடல் சோர்வடையாமல் தக்க வைக்க உதவும். நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும். கரும்புச் சாறில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்களின் உறுதித் தன்மைக்கு உதவும்.




வாய் துர்நாற்றத்தை அகற்றும். இதில் முக்கிய மருத்துவ குணம் என்னவெனில் புற்று நோய் கிருமிகளைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக பெண்களைத் தொடரும் மார்பகப் புற்று நோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே அகற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் மட்டுமன்றி சருமம் தொடர்பான பிரச்னையும் குறிப்பாக முகப்பருக்களை அழிக்கும் ஆற்றல் கரும்புச் சாறில் உள்ளது. இதில் உள்ள ஹைட்ராக்ஸி ஆசிட் இதற்கு உதவுகிறது. கோடைகாலங்களில் உடலின் சூட்டை தனிக்க இது போன்ற ஆரோக்கியமான உணவு பொருட்களை சப்பிடுவதால் உடல் நலம் ஆரோக்கியம் பெருகிறது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண