தாத்தா பாட்டிகள் தினம் 2022
இன்று இந்தியாவில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப் படுகிறது. இந்த தாத்தா பாட்டி தினம் எதனால் இவ்வளவு ஸ்பெஷலாகிறது என்றால், அவர்கள் நம் மீது கொண்டிருக்கும் அன்பு அது கிட்டத்தட்ட நம் அம்மா அப்பாவின் மீதுள்ள அன்பை விட அதிகம். அவர்கள் அவர்களின் அந்திமக்காலங்களில் நம்மையே வாழ்வின் வரமாய் எண்ணி காலத்தை தள்ளுகிறார்கள். வயதானவர்கள் ஏன் பேரன் பேத்தி வேண்டும் என்கிறார்கள் என்றால், அவர்கள் வாழ்வின் மூன்றாவது கட்டம் அது. முதற்கட்டத்தில் இருந்தது போன்ற நிம்மதியை அவர்கள் அப்போதுதான் அடைகிறார்கள். அப்போது அவர்களுக்கி மீண்டும் குழந்தையாக மாற வேண்டும் என்ற ஆசை நம் மூலமாகவே தீர்க்கப்படுகுறது. நம் அப்பாவோ, அம்மாவோ அவர்களுக்கு பிறக்கும்போது அவர்கள் வாழ்வில் பொருள் சேர்க்கும் காலத்தில் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருந்திருப்பார்கள். அப்போது அவர்கள் மீது காட்டமுடியாத அன்பை எல்லாம் நம் மீது தான் காட்டுகிறாராகள். அவ்வளவு முக்கியமாக நம்மை நினைப்பவர்களை நாம் நினைக்க வேண்டியே இந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது.
பழங்கதைகள்
நாம் காணாத ஒரு உலகில் அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களின் கீழ் வாழும் நாம் அவற்றை அவர்கள் மூலமாகவே அறிந்துக்கொள்ள முடியும். அவர்கள் சொல்லும் கதைகள் அவற்றை படம் போட்டு காட்டும். நம் வாழ்வின் முன் பகுதியை அவர்களை தவிர வேறு யாராலும் அந்த அளவுக்கு தத்ரூபமாக சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் நமக்கு சொல்வதற்காகவே அவ்வளவு நினைவுகளையும் அந்த நினைவு கொள்ளாத வயதில் தேக்கி வைத்து காத்திருக்கின்றனர் நமக்கு நினைவு தெரியட்டும் என்று.
அந்திமக்காலம்
ஒரு குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி தூக்க வேண்டும் என்பது வரை கூட அவர்கள்தான் குடும்பத்திற்கே கற்றுக்கொடுக்கின்றனர். அவர்கள் அவர்களுடைய முன்னோர்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருப்பார்கள். இந்த ஒரு பிரத்யேகமான விஷயம் மட்டும் நாம் பாடப்புத்தகத்தில், யூடியூபில் கற்றுக்கொள்வதில்லை. அவர்கள் எல்லாம் சொல்லி தரும் முன்பு நாம் தாத்தாக்களால் பாட்டிக்களால் கற்பிக்கப்படுகிறோம். ஆனால் பலர் வீட்டில் தாத்தாக்களை பாட்டிக்களை பாரமாக பார்ப்பதை நாம் பார்த்திருப்போம். முதுமை வந்த காலத்தில் அவர்களிடம் நாம் வைக்கும் மிதம் மிஞ்சிய எதிர்பார்ப்பே அதற்கு காரணம். அவர்களை அங்கு அப்படியே விட்டுவிடலாம், நம்மை சிறுவயதில் விட்டதுபோல.
தனிக்குடும்பங்கள்
தற்போதுள்ள காலத்தில் நிறைய தனிக்குடித்தனங்கள் வந்துவிட்டன. பலருக்கு ஒன்றாக இருப்பது பிடிப்பதில்லை. ஆனால் இது அவர்களுக்கு வேண்டுமானால் சவுகர்யமாக இருக்கலாம். ஆனால் தாத்தா பாட்டி இல்லாமல் வளரும் குழந்தை பலவற்றை இழக்கிறது. தாத்தா பாட்டியோடி வளரும் குழந்தைகள் தைரியமாக இருக்கின்றேனா என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அவர்கள் சொல்லும் கதைகளில் உள்ள நீதி மூலம் அவர்கள் வாழ்க்கையில் அறத்தை கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளை தனிமையில் விடாமல் இருப்பதன் மூலம் அவர்கள் வளர வளர எப்போதும் கலகலப்பாக இருக்கும் மனிதராகிறார்கள். தாத்தா பாட்டிக்களால் இவ்வளவு வேலை நம் வீட்டில் செய்கிறார்கள் என்று நாம் அறிவதே இல்லை. அவர்கள் அந்த வீட்டை பக்குவப்படுத்துதலில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அதனை நாம் அவர்கள் போன பின்பு தான் அறிகிறோம். அதனால் இந்த தினம், செப்டம்பர் 11, இப்போதே ஒரு நன்றி சொல்லி அவர்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள், அனுதினமும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்