Watch Video | வளைகாப்பு விழாவில் கூலிங் கிளாஸுடன் கூல் ஸ்டெப்ஸ் போட்ட புதுவை அமைச்சர் ப்ரியங்கா..

வளைகாப்பு நிகழ்ச்சியில் புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா நடனம் - வீடியோ வைரல்

Continues below advertisement

வளைகாப்பு நிகழ்ச்சியில் புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா நடனமாடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது. புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு(தனி) சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Continues below advertisement

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட துறையை மிகவும் சிறப்பாக கவனித்து வருவதாக பெயர் எடுத்துள்ளார்.

குறிப்பாக பெண்களுக்கு இலவச பிங்க் பேருந்து, பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் திருச்சியில் நடைபெற்ற தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சந்திர பிரியங்கா மேடையில் பெண்களுடன் இணைந்து சினிமா பாடலுக்கு நடனமாடினார். தற்போது அந்த காட்சிகள் இணைத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement