கொரோனா வந்ததுதான் வந்தது, ஏகப்பட்ட பிரச்னைகளையும் கையோடு கூட்டிவந்து விட்டது. அதில், பரம்பரை சேமிப்பை எல்லாம் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை செலவுக்கு இணையாக இல்லாவிட்டாலும், தவிர்க்கவே முடியாத செலவாக வந்துநிற்கிறது, தற்காப்பு சாதனங்கள், பொருள்களின் விலை!
பொதுமக்களில் பலர் கேள்விப்பட்டிருக்கக்கூட வாய்ப்பு இல்லாத பல பொருள்களும் இப்போது தெருமுனைக் கடையில் கூட சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. அரசாங்கத்தால் அனுமதி பெற்று தெருத்தெருவாக வண்டியில் வந்து விற்பனை ஆகாதுதான் பாக்கி! மாஸ்க் எனப்படும் முகக்கவசத்தை ஊர்ப்புறம், நகர்ப்புறம் என வேறுபாடு இல்லாமல், சாலையோரம் ஆங்காங்கே விற்கப்படுவதைப் பார்க்கமுடிகிறது. ஒரே விலையாக இல்லாவிட்டாலும் பொருளின் தரத்துக்கும் நிறத்துக்கும் தினுசுக்கும் ஏற்றபடி பணத்தை அள்ளித்தர வேண்டியிருக்கிறது. முகக்கவசம், கையுறை, கவச உடை, முகக்கேடயம் (ஃபேஸ் ஷீல்டு) போன்றவற்றை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமின்றி, அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதுவே சரியானதும் கூட. இவற்றின் விலை இன்னதுதான் என நிர்ணயிக்கப்படாமல் இருந்ததால், கொரோனா முதல் அலையில் அதிக விலைக்கு இவை விற்பனை செய்யப்பட்டன. இரண்டாம் அலையில் ஓரளவுக்கு மட்டுப்பட்டாலும்கூட ஒரே தரமுள்ள பொருளுக்கு வெவ்வேறு விலை வைத்து விற்பது தொடர்கிறது. இது குறித்து ஏராளமானவர்கள் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர், கொரோனாவை எதிர்கொள்வதற்கு அத்தியாவசியமான இந்தப் பொருள்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அரசுக்கு எழுதினார். கொரோனாவை முன்னிட்டு நடைமுறையில் இருந்துவரும் 1949 தமிழ்நாடு அத்தியாவசியப் பொருள்கள் கட்டுப்பாட்டு முறைப்படுத்தல் சட்டத்தின்படி, முகக்கவசம் முதலிய 15 சாதனங்கள், பொருள்களை, ’அத்தியாவசியப் பொருள்கள்’ என அறிவிக்கை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று முகக்கவசம் உள்பட்ட 15 பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்கள் என அறிவிக்கை செய்யப்படுகிறது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, 200 மி.லி. அளவுக்கு சானிடைசர் அதிகபட்சமாக 110 ரூபாய்வரைதான் விற்பனை செய்யப்படவேண்டும். இதைப்போல என் 95 முகக்கவசம் 22 ரூபாய்க்கும் இரட்டை மடிப்பு அறுவைசிகிச்சை முகக்கவசம் 3 ரூபாய்க்கும், மும்மடிப்பு அறுவைசிகிச்சை முகக்கவசம் 4 ரூபாய்க்கும் இதிலேயே நெய்யப்படாத செயற்கை இழைப் பூச்சு கொண்டவை 4.5 ரூபாய்க்கும் அதிகபட்சமாக விற்கப்பட வேண்டும். பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடக்கூடிய மேலங்கி 12 ரூபாய், அறுவைச்சிகிச்சை அங்கி 65 ரூபாய், தனிநபர் பாதுகாப்பு கவசம் ஒன்று 273 ரூபாய் என அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையிலேயே அதிக நேரம் இருப்பவர்கள் பயன்படுத்தக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட கையுறை 15 ரூபாய்க்கும், பரிசோதனை செய்வதற்கான கையுறை 5.75 ரூபாய்க்கும் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்படவேண்டும்.
அதிக அடர்த்தியான ஆக்சிஜன் தேவை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் தெரபி அளிக்கையில் தேவைப்படும் முகக்கவசம் 80 ரூபாய்க்கும், ஆக்சிஜன் முகக்கவசம் 54 ரூபாய்க்கும், ஈரப்பதம் மானிட்டர் செய்யும் ஆக்சிமீட்டர் 1520 ரூபாய்க்கும், விரல்நுனி மூலம் நாடித்துடிப்பையும், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை அளக்கும் ஆக்சிமீட்டர் 1500 ரூபாய்க்கும், ஃபேஸ் ஷீல்டு எனப்படும் முகக்கேடயம் 21 ரூபாய்க்கும்வரைதான் அதிகபட்சமாக விற்கவேண்டும் என்று அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.