உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று (புதன்கிழமை) கோரக்பூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுத்தைக்குட்டிக்கு பால் ஊட்டினார். இந்நிகழ்வில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க ராமாயணம் மக்களை ஊக்குவிக்கிறது என்றார்.


ராமருக்கு உதவிய விலங்குகள்


முதல்வர் யோகி ஆதித்யநாத், அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்காவிற்குச் சென்று மூன்று மாதங்களுக்கு முன்பு மீட்கப்பட்ட குட்டியை தனது கைகளில் வைத்திருந்தார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இராவணனால் கடத்தப்பட்ட சீதையின் இருப்பிடம் தெரியாமல் இருந்தபோது, ​​குரங்குகள், கரடிகள், ஆறுகள், மரங்கள் மற்றும் கற்கள் ராமரின் நண்பனாக மாறியது என்று இந்து இதிகாசமான ராமாயணத்தை குறிப்பிட்டு பேசினார்.






ராமாயணம் கூறும் செய்தி


ராம ராஜ்ஜியத்தின் உணர்வின்படி, மனித நலனோடு சேர்த்து ஒவ்வொரு உயிரினத்தையும் பாதுகாப்பதில் நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும். ராமாயணத்திலிருந்து இந்த உத்வேகத்தையும் செய்தியையும் பெறுகிறோம் என்றார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.


தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!


விலங்குகளை பாதுகாக்க வேண்டும்


இயற்கையும் விலங்குகளும் நம் வாழ்வின் அங்கம். நாம் வாழும் உலகில் எல்லோருக்கும் சம பங்கு உண்டு. இயற்கை மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதில் தங்களின் பொறுப்புகளை உணர்ந்தால் மட்டுமே மனிதர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் மேலும் வலியுறுத்தினார். 






பெயர் வைத்த யோகி


முதல்வர், அவர் உணவளித்த அந்த சிறுத்தைக் குட்டிக்கு ஓயர் சூட்டியது மட்டுமின்றி, மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகளுக்கு பெயரிட்டார். மேலும் பேசிய அவர், விலங்குகள் என்னோடு மிகவும் நட்பாக இருக்கின்றன. ஏனெனில் விலங்குகளுக்கு நன்றாக தெரியும், யார் தீங்கு விளைவிப்பவர், யார் தீங்கு விளைவிக்க மாட்டார் என்று அவர்கள் அறிந்து கொள்ளும் தனித்திறன் உள்ளது. எனவே என்னோடு மிகவும் நட்பாக பழகுகின்றன என்றார். மஹாராஜ்கஞ்ச், சித்ரகூட் மற்றும் கோரக்பூரில் பருந்துகள் அழியும் தருவாயில் உள்ளதால் பருந்துகள் பாதுகாப்பு மையங்கள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார். மார்ச் 27, 2021 அன்று இந்த மிருகக்காட்சிசாலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.