Amazon Delivery: அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைவராக சமீர் குமார் பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் முதல் பெரிய அறிவிப்பு இதுவாகும்.
அமேசானிலும் உடனடி டெலிவெரி:
ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இறுதியாக ஜொமாட்டோவின் பிளிங்க்இட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ, ஃப்ளிப்கார்ட் மினிட்ஸ், பிக்பாஸ்கெட், உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களுடன் இணைந்து இந்தியாவின் $6 பில்லியன் விரைவு வர்த்தக சந்தையில் போட்டியிட உள்ளது. அமேசான் நிறுவனத்தின் ரேபிட் டெலிவிரி பிரிவு இந்த பணிகளை மேற்கொள்ளும் என, அமேசான் இந்தியாவின் கன்ட்ரி மேனேஜர் சமீர் குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் சோதனை முயற்சி:
இந்த மாத இறுதியில் பெங்களூருவில், அமேசான் நிறுவனத்தின் ரேபிட் செலிவெரிக்கான சோதனை முயற்சிகள் தொடங்க உள்ளன. அமேசான் அதன் விரைவான வர்த்தக சேவையை Tez என அழைக்கும் என்று அறிக்கைகள் முன்னர் பரிந்துரைத்திருந்தாலும், நிறுவனம் இன்னும் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுதொடர்பாக பேசிய சமீர் குமார், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை 15 நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவாகப் பெறுவதற்கான தேர்வை வழங்க நாங்கள் ஒரு சோதனையை தொடங்க இருக்கிறோம் " என்று கூறினார்.
அமேசானின் இலக்கு என்ன?
மேலும், ”எங்கள் திட்டம் எப்போதும் 'தேர்வு, மதிப்பு மற்றும் வசதி' ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, மேலும் இந்தியாவில் ஒரு பெரிய இலாபகரமான வணிகத்தை உருவாக்குவதேநாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பின்-கோடைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் அதிவேக வேகத்திலும் சிறந்த மதிப்பிலும் மிகப்பெரிய தேர்வை வழங்குவதற்கான எங்கள் உத்தியைச் செயல்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” எனவும் சமீர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்னாள் தலைவரான மணீஷ் திவாரியிடம் இருந்து பொறுப்பேற்ற குமாரின் பதவிக்காலத்தின், வெளியாகும் முதல் பெரிய அறிவிப்பு இதுவாகும் . பல ஊடக அறிக்கைகளின்படி, அமேசானின் விரைவான வர்த்தக முயற்சி பல மாதங்களாக செயல்பாட்டில் உள்ளது மற்றும் இறுதியாக இந்தியாவில் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகள் மாறிவரும் நேரத்தில் பலனளித்துள்ளது.
அதிகரித்து வரும் வாடிக்கையாளர்கள் இப்போது 1 மற்றும் 2 நாள் டெலிவரிகளில் இருந்து விலகி, விரைவான வர்த்தக தளங்களில் இருந்து வாங்குகின்றனர். விரைவு வர்த்தக நிறுவனங்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இ-காமர்ஸ் மேஜர்களின் பங்கை தன்வசப்படுத்துகின்றன. இது இரண்டு ஜாம்பவான்களையும் தங்கள் சொந்த விரைவான விநியோக சலுகைகளைத் தொடங்க கட்டாயப்படுத்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம் பாரம்பரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் தற்போதைய வாடிக்கையாளர் தளத்தை வலுவாக கட்டியெழுப்பலாம். "எங்களிடம் ஏற்கனவே இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர், அவர்கள் எங்களை நம்பும் பிரைம் உறுப்பினர்கள் மற்றும் இந்த வசதியை எதிர்நோக்குவோம்" என்று சமீர் நம்பிக்கை தெரிவித்துள்ளா.