கேரளா புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்


புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவக திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கேரளா புறப்பட்டார். வைக்கம் போராட்ட வெற்றியின் நூற்றாண்டு நிறைவு விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 



பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு. சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


மீண்டும் எகிறிய தங்கம் விலை


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று 640 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 285 ரூபாயை எட்டியுள்ளது.


கலைஞர் கைவினைத் திட்டம்


கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், www.msme.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு. கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக உயர்த்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது


பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை


வணிக நோக்கத்திற்காக (Bike-Taxi) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவு. சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.


மணிப்பூரில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம்


மணிப்பூரில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958 நீக்கக் கோரியும், தீவிரவாதிகள் என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் இம்பாலில் பேரணி நடத்தினர்.மாநிலத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.


சம்பல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ராகுல் காந்தி


உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் நடைபெற்ற வன்முறையில் இஸ்லாமியர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் உத்தரபிரதேசம் செல்ல முயன்றபோது, மாநில காவல்துறை ராகுல் காந்தியை அனுமதிக்கவில்லை.


4 நாட்கள் வேலை, 3 நாட்கள் லீவு


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பெற்றுக்கொள்வது, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணி நேரத்தை தாண்டி வேலை செய்ய நேரிடுவதால் பலரும் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குவதாக கூறப்படுகிறது.


மோசமான வைரஸ்கள் மாயம்


ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து, மோசமான வைரஸ்கள் அடங்கிய 300-க்கும் அதிகமான குப்பிகள் மாயமாகியுள்ளன. அந்த குப்பிகளில் ஹென்ட்ரா , லைசா மற்றும் ஹன்டா வைரஸ் மாதிரிகள் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டாப் 10ல் ஹர்திக் பாண்ட்யா


2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா 7வது இடம் பிடித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பாலினம் சார்ந்த சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே காலிஃப் முதலிடத்தில் உள்ளார்.