புனித வெள்ளி கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசு கிறிஸ்து மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார் என்று நம்பப்படுகிறது. பின்னர் அவர்கள் இரட்சிப்பின் பாதையில் செல்ல முடியும் எனவும் நம்புகிறார்கள். எனவே, கிறிஸ்து செய்த தியாகங்களை நினைவுகூரும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள்.
இன்றைக்கு அவர்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர். உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு புனித வெள்ளியன்று அனுப்ப மேசேஜ்கள் இங்கே!
இயேசுவின் கருணையால் உங்கள் வாழ்வில் என்றும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவட்டும். புனித வெள்ளி திருநாள் அன்று கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
இயேசு இவ்வுலக மக்களுக்காக தன்னையே தியாகம் செய்தநாளான இன்று, இயேசு பிரானின் அன்பை நினைவு கூர்வோம். இந்தநாள் உங்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.
புனித வெள்ளி நம்பிக்கையின் நாள். இன்றைய நாளில் நாம் ஒளி பொருந்திய எதிர்காலத்திற்கான நம்பிக்கை பாதையை கண்டடைகிறோம்.
கர்த்தரின் ஆசிர்வாதம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும். புனித வெள்ளி நாளில் கர்த்தர் உங்களுடன் இருப்பாராக!
அமைதி, அன்பு, மற்றும் கர்த்தர் என்றும் உங்களுடன் இருப்பாராக!
நம் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குபவர்கள் இயேசு பிரான் ஒருவரே! அவரிடம் சரணடைவோம்!
இயேசுவின் அருளால் உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும். புனித வெள்ளி உங்களுக்கு நன்னாளாக அமையட்டும்.
இன்றைக்கு புனித வெள்ளி! இயேசு உங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கடும்!
இன்றைய புனித வெள்ளி நாளில், இயேசு பிரான் போதித்த கருணை, அன்பு மற்றும் சேவை செய்யும் குணங்கள் அனைத்தையும் பின்பற்ற உறுதி ஏற்போம்!
இயேசு போதித்தித்து சென்றது. மன்னிப்பு. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். மறந்துவிடுங்கள். அன்பை விதையுங்கள். எல்லோரிடமும் அன்பாக இருக்க உறுதி கொள்ளுங்கள்!
இயேசு நம் பாவங்களை மன்னித்து, நமக்கு நல்லதொரு வாழ்க்கையை ஆசிர்வாதிக்கட்டும்.
புனித வெள்ளி நாளில், இயேசுவின் தியாத்தின் வாழ்வில் பயணிப்போம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்