Golden Visa Rule: கோல்டன் விசா என்றால் என்ன? பிரபலங்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன்? பலன்கள் என்னென்ன?

Golden Visa Rule: கோல்டன் விசா என்றால் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Golden Visa Rule: கோல்டன் விசாவின் பலன்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

கோல்டன் விசா விதி:

இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் வெளிநாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏராளமான பணக்கார இந்தியர்கள் லண்டனில் சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர்.  இந்தியர்கள் வெளிநாடுகளில் சொத்து முதலீடு செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. உலகளாவிய அணுகல், சொத்து பல்வகைப்படுத்தல், சிறந்த வாழ்க்கை முறை விருப்பங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான மூலோபாய திட்டமிடல் ஆகியவை இதில் அடங்கும். இதன் காரணமாக அதிகரிக்கும் தங்கள் நாட்டின் பொருளாதரம் காரணமாகவே, பல நாடுகள் கோல்டன் விசா நடைமுறையை ஊக்குவிக்கின்றன. இது அந்த பயனாளர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்குகின்றன.

கோல்டன் விசா திட்டம் என்றால் என்ன?

பல பணக்கார இந்தியர்கள் குடியுரிமை பெற மற்ற நாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். 'கோல்டன் விசா' போன்ற திட்டங்கள் பணக்கார இந்தியர்களுக்கு மற்றொரு நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பல நாடுகளில் உள்ள திட்டங்கள் முதலீடு மூலம் இரண்டாவது வசிப்பிடத்தை பெற அனுமதிக்கின்றன. கிரீஸ், துருக்கி, கரீபியன் நாடுகள், மால்டா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கோல்டன் விசா திட்டத்தின் நன்மைகள்:

கோல்டன் விசா மூலம் கிடைக்கும் வசிப்பிட மற்றும் குடியுரிமை திட்டங்கள் பல நன்மைகளை வழங்குகின்றன. அணுகல் எளிமை, விசா இல்லாத பயணம் மற்றும் நீண்ட காலம் தங்கியிருப்பது மற்றும் குடியுரிமை ஆகியவை இதில் அடங்கும். அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீட்டு வாய்ப்புகள், ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை உள்ள நாடுகளில் இந்திய மக்கள் குடியுரிமை பெறுகின்றனர். இந்திய மக்களுக்கு ஐரோப்பாவில் வசிப்பிடத்திற்கான முதல் தேர்வாக மால்டா உருவாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கோல்டன் விசா திட்டத்தின் மூலம் இந்தியர்கள் அங்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாடுகளின் விதிகளுக்கு ஏற்பா. கோல்டன் விசா பயனாளர்களுக்கான சலுகைகள் மாறுபடுகின்றன.

மால்டாவின் கோல்டன் விசா திட்டத்தில் அதிகரிக்கும் ஆர்வம்:

கோல்டன் விசா திட்டம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. ஐரோப்பாவில் உள்ள மற்ற திட்டங்களைப் போலல்லாமல் இது நிரந்தர குடியுரிமை வாய்ப்பை வழங்குகிறது. மால்டாவின் இந்த நிரந்தர குடியுரிமை திட்டம் மக்கள் குடியுரிமை பெற மிகவும் உதவியாக உள்ளது. இது தவிர, மக்கள் எந்த விதமான மொழித் தடையையும் சந்திக்க வேண்டியதில்லை.

கோவிட் இரண்டாவது அலைக்குப் பிறகு அதிகரிப்பு

2011-12ல் முதலீடு மூலம் குடியுரிமை பெறும் போக்கு உலகம் முழுவதும் தொடங்கியது. இது 2008-09 நிதி நெருக்கடிக்குப் பிறகு தொடங்கியது. ஆனால், கோவிட் இரண்டாவது அலைக்குப் பிறகு பணக்கார இந்தியர்கள், என்ஆர்ஐக்கள் மற்றும் உலகளாவிய இந்தியர்கள் மத்தியில் வெளிநாடுகளில் முதலீடு மூலம் குடியுரிமை பெறுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. பல இந்தியர்கள் பிளான் பியின் கீழ் இரண்டாவது வீட்டு விருப்பத்தை விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் கோல்டன் விசா திட்டத்தின் கீழ் முதலீடு செய்கிறார்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola