கோவாவில் கோபி மஞ்சூரியன் உணவிற்கு தடை:


நாடு முழுவதும் மாநிலத்திற்கு மாநிலம் உணவு முறைகள் வேறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு உணவுகள் ஸ்பெஷலாக இருக்கும். மேலும், அனைத்து மாநிலங்களிலும் எல்லா உணவுகளும் கிடைக்காது. ஆனால், நாடு முழுக்க மிகவும்  பிரபலமாகவும், சைவ உணவு பிரியர்கள் பிடித்ததுமாக இருப்பது கோபி மஞ்சூரியன்தான்.


எப்படி, அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் பிடிக்குமோ, அதே அளவுக்கு சைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தது கோபி மஞ்சூரியன்.  ஆனால், இந்த கோபி மஞ்சூரியன் உணவிற்கு  யூனியன் பிரதேசமான கோவாவில் மொத்தமாக தடை விதித்துள்ளது. 


காலிஃபிளவரை வைத்து செய்யப்படும் இந்த உணவில், பல செயற்கை நிறங்கள் கலக்கப்படுகிறது. சுவைக்காவும், உணவு நிற ஈர்ப்புக்காகவும் செயற்கை நிறங்கள் கலக்கப்படுகிறது. இதனால், உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.  இதன் காரணமாக,  யூனியன் பிரதேசமான கோவாவில் கோபி மஞ்சூரியன் உணவுக்கு மொத்தமாக அம்மாநில அரசு தடைவித்துள்ளது. 


காரணம் என்ன?


கோபி மஞ்சூரியன் சுகாதாரம் தொடர்பாக பல ஆண்டுகளாகவே சர்ச்சை நிலவி வருகிகறது. இந்த உணவு உடலுக்கு தீங்கை விளைவிப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தான் கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


கோபி மஞ்சூரியனின் தோற்றம் என்பது சிக்கன்  மஞ்சூரியனில் இருந்து வந்தது. மும்பையில் சீன உணவை சமைப்பதில் பிரபலமான நெல்சன் வாங் என்பவர் சீக்கன் மஞ்சூரியனை தயார் செய்தார்.  1970ஆம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் உணவு பரிமாறும்போது இந்த உணவு முதன்முதலில் இடம்பெற்றது. 


பின்னர், புது வகையான உணவை உருவாக்க முயன்ற நெல்வான் வாங், கார்ன் ஃப்ளார் மாவில் சிக்கன் நகெட்களை மிக்ஸ் செய்து வறுத்து, அதை  சோயா சாஸ், வினிகர், சர்க்கரை ,  தக்காளி சாஸுடன் பரிமாறினார். அசைவ பிரியர்களுக்காக சிக்கன் மஞ்சூரியன் இருந்த நிலையில், சைவ பிரியர்களுக்காக கோபி மஞ்சூரியன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


CBSE: பள்ளி பாடப்புத்தகத்தில் டேட்டிங், உறவுகள் பற்றிய பாடமா?- சிபிஎஸ்இ விளக்கம்!


 US Elections 2024: ரிப்பீட்டு.. அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை பழி தீர்ப்பாரா டிரம்ப்?