மகளுக்கு தந்தை ஜீவனாம்சம் வழங்கவேண்டி தொடர்ந்த வழக்கில் "பெண் குழந்தைகள் பெற்றோர்களுக்கு பாரமில்லை" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த வெள்ளிக்கிழமையன்று தந்தையின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பெண் குழந்தைகள் ஒரு பாரம்' என்று கூறியதையடுத்து அதனை மறுத்துள்ளது.


ஜீவனாம்ச வழக்கு


"பெண் குழந்தைகள் ஒன்றும் பாரம் இல்லை", என்று கூறிய நீதிபதி சந்திரசூட், சட்டத்தின் முன் சமத்துவத்தைக் கையாளும் அரசியலமைப்பு சட்டத்தின் 14 வது பிரிவைக் குறிப்பிட்டு பேசினார். 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தந்தை ஜீவனாம்சம் தராதது குறித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்ததது. அந்த வழக்கில்தான் இந்த கருத்தை நீதிபதி முன் வைத்திருக்கிறார்.



நிலுவை தொகை செலுத்தப்படவில்லை


2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, மகளுக்கு மாதம் ரூ. 8000 மற்றும் மனைவிக்கு ரூ. 400 என கணக்கிடப்பட்ட ஜீவனாம்ச நிலுவைத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்று விண்ணப்பதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார். அந்த நேரத்தில் இரண்டு வாரங்களுக்குள் அவரது மனைவி மற்றும் மகளுக்கு ரூ.2,50,000 செலுத்துமாறு அந்த நபருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.


தொடர்புடைய செய்திகள்: The Gray Man Review: தனுஷின் ஹாலிவுட் எண்ட்ரி.. மிரட்டும் சண்டைக்காட்சிகள்.. எப்படி வந்திருக்கிறது தி கிரே மேன்..?


வங்கி பதிவுகள் சமர்ப்பிப்பு


பின்னர், இந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​கடந்த ஆண்டு மனைவி இறந்துவிட்டதாக நீதிமன்ற அமர்வு தெரிவித்தது. அவரது தந்தையின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் முறையாக ஜீவனாம்ச நிலுவைத் தொகையை செலுத்தி விட்டதாக, அதற்கான வங்கி அறிக்கைகளை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.



அறிக்கை தயாரிக்க வலியுறுத்தல்


"உரிய ஜீவனாம்சம் செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த உண்மையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் நிலைப்பாட்டைக் கண்டறிந்து உண்மை அறிக்கையைத் தயாரிக்க பதிவாளரை கேட்டுக்கொள்கிறோம்", என்று நீதிமன்றம் கூறியது. அதுமட்டுமின்றி பதிவாளர் அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.


நீதிமன்றம் உத்தரவு


இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ​​அந்த பெண் ஒரு வழக்கறிஞர் என்றும், நீதித்துறை சேவைகளுக்கான தேர்வில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றும் பெஞ்ச் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெண் தன் தந்தையை சார்ந்து இருக்கக்கூடாது என்பதற்காக தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நீண்ட நாட்களாக பெண்ணும் அவரது தந்தையும் ஒருவருக்கொருவர் பேசவில்லை என்று பெஞ்ச் தெரிவித்ததையடுத்து, இருவரும் பேசுமாறு நீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் தனது மகளுக்கு 50000 ரூபாய் செலுத்துமாறு தந்தையிடம் நீதிமன்றம் கூறியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.