சத்தீஸ்கர் முதலமைச்சர்:


சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் பல்வேறு  திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே கலந்து  உரையாடினார். உரையாடலின் போது சித்ரகோட் பகுதியைச் சேர்ந்த சிறுமியை சேர்ந்த சிறுமி, பூபேஷ் பாகலிடம் உரையாற்றினார்.


பணமில்லாததால் படிக்க முடியவில்லை:


சித்ரகோட் பகுதியைச் சேர்ந்த சிறுமியை சேர்ந்த சிறுமி, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரிடம் தனது தந்தை, தனக்கு 15 வயது உள்ள போதே இறந்துவிட்டதாக கூறினார். அதனால் எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளதாக அச்சிறுமி கூறினார். இதனால் தானும், தனது சகோதரனும் கல்வி கற்க முடியவில்லை எனக் கூறினார்.






உடனே உதவி:


சிறுமி கூறியதை கேட்ட முதலமைச்சர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், அச்சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்தார். உடனே அருகில் இருந்த பஸ்தர் மாவட்ட பொறுப்பாளரிடம் சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டார்.


முதல் கால்பந்து மைதானம்:






ஜக்தல்பூரில், சர்வதேச கூட்டமைப்பு கால்பந்து சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, ரன்னிங் டிராக்குடன் மாநிலத்தின் முதல் கால்பந்து மைதானத்தை பாகெல் இன்று தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண