சமீப காலமாக, நீதிமன்றங்கள் பல்வேறு விதமான சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறது. குறிப்பாக, பசுவதை தொடர்பாக நீதிபதிகள் கூறும் கருத்து பேசு பொருளாக மாறி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


அந்த வகையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு, சமீபத்தில் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் மட்டும் இன்றி பொதுவெளியிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்கு:


பசு வதையைத் தடை செய்து, பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசு உரிய முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தெரிவித்திருந்தது. 


உத்தரப் பிரதேச பசு வதை தடுப்புச் சட்டம், 1955இன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஷமிம் அகமது, "நாம் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம். எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும். இந்து மதத்தில், பசு தெய்வீகமானது. 


பசுவின் நம்மைகள்:


புசு, இயற்கை நன்மையின் பிரதிநிதி என்று நம்பிக்கை உள்ளது. எனவே, அதைப் பாதுகாத்து வணங்க வேண்டும். பசு, பல்வேறு தெய்வங்களுடனும் தொடர்புடையது. குறிப்பாக சிவபெருமான் (அவருடைய குதிரை நந்தி, காளை) இந்திரன் (காமதேனுவுடன் நெருங்கிய தொடர்புடையது), கிருஷ்ணர் (இளமையில் மாடு மேய்ப்பவராக இருந்தார்), பொதுவாக அனைத்து தெய்வங்களுடன் தொடர்பு உள்ளது.


பசுவின் கால்கள் நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன், பால் நான்கு புருஷார்த்தத்தை குறிக்கிறது. அதாவது, மனித நோக்கங்களான தர்மம் அல்லது நீதி. அர்த்தம் அல்லது பொருள் செல்வம். காமம் அல்லது ஆசை. மற்றும் மோட்சம் அல்லது ரட்சிப்பு. அதன் கொம்புகள் தெய்வங்களை குறிப்பிடுகிறது. அதன் முகம் சூரியன் மற்றும் சந்திரனை குறிக்கிறது. அதன் தோள்கள் அக்னியை (நெருப்பு கடவுள்) குறிக்கிறது.


நந்தா, சுனந்தா, சுரபி, சுசீலா, சுமனா போன்ற மற்ற வடிவங்களிலும் பசு விவரிக்கப்பட்டுள்ளது. பசுவின் தோற்றம் வேத காலத்தில் இருந்து அறியப்படுகிறது. கிமு இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த இந்தோ-ஐரோப்பிய மக்கள் மேய்ப்பர்களாக இருந்தார்கள்.


மனுஸ்மிருதி:


பொருளாதார அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது கால்நடைகள். அது மதத்தில் பிரதிபலித்துள்ளது. பால் உற்பத்தி செய்யும் பசுக்களை வெட்டுவது அதிக அளவில் தடை செய்யப்பட்டது. மனுஸ்மிருதியிலும் மகாபாரதத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. ரிக்வேதத்தில் பால் சுரக்கும் பசுவை கொல்ல முடியாதது என்று கூறப்பட்டது.


கூடுதலாக, அதன் தயாரிப்புகள் ஊட்டச்சத்தை அளிப்பதால், தாய்மை மற்றும் பூமியுடன் தொடர்புடையதாக பசு கருதப்படுகிறது. 


பசுவைக் கொல்வதற்கு எதிரான சட்டம் 20 ஆம் நூற்றாண்டு வரை பல சமஸ்தானங்களில் நீடித்தது. பசுக்களைக் கொல்வோர் அல்லது அதனை கொல்ல அனுமதிப்பவர்கள், அவர்களின் உடலில் முடிகள் உள்ளவரை நரகத்தில் அழுகி கெடுவார்கள் என நம்பப்படுகிறது" என தெரிவித்துள்ளது.