பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது நாளந்தா மாவட்டம். நாளந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது தௌலத்புர் கிராமம். இந்த கிராமத்தில்  இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த பெண் வழக்கமாக அருகில் உள்ள செடிகளில் இருந்து தனது வீட்டிற்காக பூக்களை பறித்து வருவது வழக்கம்.


பாம்பு கடிக்கு ஆளான பெண்:


இந்த நிலையில், வழக்கம்போல நேற்றும் அந்த பெண் பூக்களை பறிக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு செடிகளின் நடுவே இருந்த பாம்பு ஒன்று அந்த பெண்ணை கடித்துள்ளது. இதனால், அந்த பெண் அச்சத்தில் கத்தியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினரும், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் அந்த பெண்ணை அருகில் உள்ள சன்டெய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண்ணை உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண்ணை அருகில் இருந்த பிகார்ஷரீப் சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணை எந்த பாம்பு கடித்தது என்று தெரியவில்லை என்பதால், சிகிச்சை அளிப்பதில் சிரமமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.


குடும்பத்தினர் செய்தி காரியம்:


இதைக்கேட்ட குடும்பத்தினர் செய்த காரியத்தை பார்த்த மருத்துவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மருத்துவமனையும் அதிர்ச்சியில் உறைந்தது. அதாவது, மருத்துவர்கள் எந்த பாம்பு என்ற கேட்டதும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான ட்ரம்மை திறந்துள்ளனர். அந்த ட்ரம்மில் அந்த பெண்ணை கடித்த பாம்பு இருந்துள்ளது.






அந்த பாம்பை மருத்துவரிடம் காட்டி இந்த பாம்புதான், அந்த பெண்ணை கடித்ததாக கூறியுள்ளனர். இதைக்கேட்ட மருத்துவர்களும், அங்கு நின்ற மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, அபாய கட்டத்தில் இருந்து தப்பித்த அந்த பெண் உரிய சிகிச்சை பெற்ற பிறகு, வீட்டிற்கு திரும்பினார்.


பெண்ணின் உயிரை காப்பாற்ற அந்த பெண்ணின் குடும்பத்தினர், கடித்த பாம்பையே மருத்துவமனைக்கு தூக்கி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க: மக்களிடம் கத்தியைக் காட்டி தொடர் அட்டூழியம்; 3 இளைஞர்களுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ் - நடந்தது என்ன.?


மேலும் படிக்க: ஆட்டை வேட்டையாடி சென்ற சிறுத்தை..! அச்சத்தில் நெல்லை மக்கள்..!