கேரளாவின் கொச்சியில் உள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வரதட்சணை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அவர் அளித்த புகாரில், திருமணத்தின்போது தன்னுடைய பெற்றோர்கள் வரதட்சணையாக அளித்த 55 சவரன் தங்க நகைகளை, அவரது கணவர் அவருடைய லாக்கரில் வைத்துள்ளதாகவும், அதை தன்னிடம் திருப்பி அளிக்க உத்தரவிடுமாறும் புகார் அளித்திருந்தார்.
இதை விசாரித்த மாவட்ட வரதட்சணை தடுப்பு பிரிவு அதிகாரி, நகைகளை திருப்பி அளிக்குமாறு பெண்ணின் கணவருக்கு உத்தரவிட்டார். வரதட்சணை தடுப்பு அதிகாரியின் இந்த உத்தரவுக்கு எதிராக அந்த பெண்ணின் கணவர் கேரளாவின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது திருமணத்தின்போது வழங்கப்பட்ட 55 சவரன் நகைகள் வரதட்சணையாக வழங்கப்படவில்லை. எனவே, அதை திருப்பி அளிக்குமாறு உத்தரவிட மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரிக்கு உரிமையில்லை என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
மேலும் படிக்க : கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. பெண்ணின் நாடகம்.. சிசிடிவியை பார்த்து அதிர்ந்த போலீசார்..
இந்த மனு நீதிபதி எம்.ஆர். அனிதாவின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணத்தின்போது பெற்ற மகளின் நலனுக்காக யாருடைய வற்புறுத்தலும் இன்றி பெற்றோர் அளிக்கும் பரிசுப்பொருட்கள் வரதட்சணையாக கருத முடியாது என்று உத்தரவிட்டார்.
நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டாலும், அந்த பெண்ணின் கணவர் தனது லாக்கரில் உள்ள 55 சவரன் நகை, திருமணத்தின்போது பெண்ணின் பெற்றோர்கள் அளித்த தங்கசங்கிலி உள்ளிட்ட நகைகளை திருப்பி அளிக்க சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்தியாவில் வரதட்சணைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். கேரளாவில் சமீபத்தில் கூட விஸ்மயா என்ற இளம்பெண்ணுக்கு கணவர் அளித்த வரதட்சணை கொடுமையால், அந்த பெண் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஸ்மயாவிற்கு அவரது பெற்றோர்கள் 100 சவரன் தங்க நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 10 லட்சம் பணம் மற்றும் ஒரு கார் வரதட்சணையாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Headlines Today, 16 Dec: தமிழ்நாட்டில் ஒமிக்ரான்... வாய் திறந்த கோலி.. தங்கமணி வீட்டில் ரெய்டு... இன்னும் பல!
மேலும் படிக்க : ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்