ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் வால்கர் விஸ்சிங். இவர் பெங்களூருவில் நடைபெற்றும் டிஜிட்டல் அமைச்சர்களின் மட்டத்திலான ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் உள்ள சாலையோர காய்கறி கடையில் காய்கறி வாங்கியுள்ளார். அதற்கு பணம் செலுத்த யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (UPI) பயன்படுத்தினார். இது தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, ஜெர்மன் தூதரகம் இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது. மேலும், UPI ஐப் பயன்படுத்தி பணத்தை செலுத்திய அமைச்சர் விஸ்சிங் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், UPI பயன்படுத்தி நொடிப்பொழுதில் பணப்பரிவர்தணை செய்ய முடியும் என்றும், லட்சக்கணக்கான் இந்தியர்கள் இதனை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் விஸ்சிங் இதனை கண்கூடாக பார்த்துள்ளார் என்றும் சாலையோர கடைகளில் கூட UPI முறை இருப்பது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த பதிவில் பதிலளித்த ஒருவர், “ இது போல் UPI மூலம் பணம் செலுத்தும் முறையை உலக நாடுகள் அங்கீகரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது இந்தியாவின் வேகமான கட்டண முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் உடனடியாக பணம் செலுத்த உதவுகிறது. இது வாடிக்கையாளரால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் கட்டண முகவரியை (VPA) பயன்படுத்துகிறது. இதுவரை, இலங்கை, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் இணைந்து வளர்ந்து வரும் ஃபின்டெக் மற்றும் பேமெண்ட் தீர்வுகளில் இணைந்துள்ளன. முன்னதாக ஜூலை மாதம், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவும் பிரான்சும் UPI கட்டண முறையைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Bahubali Elephant : பொம்மை யானையுடன் சண்டையிட்ட ’பாகுபலி’ யானை ; அச்சமடைந்த வனக்கல்லூரி மாணவர்கள்..