நண்பர்கள் தினம் 2023:


உலகின் அற்புதமான உறவுகளில் முதன்மையான ஒன்றாக இருப்பது நட்பு. எந்தவித ரத்த சொந்தமோ அல்லது எந்த விதமான நேரடி தொடர்புகளோ கூட இல்லாமல் எங்கிருந்தோ வந்த ஒருவரை நமக்கானவர் என்று ஏற்றுக் கொள்வதே நப்பு. பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு என்றாலும், ரயில் சிநேகமாகய் வழித்தடங்களில் பூக்கும் நட்பு என்றாலும் நம் வாழ்வில் அவசியமான ஒரு உறவாக அது மாறிவிடுகிறது. நட்புறவுகள் பல்வேறு பருவங்களில் பல்வேறு சூழல்களில் ஏற்படுகிறது. இப்படி உன்னதான நட்பை அங்கீகரிக்கும் பாராட்டும் விதமாகவே இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.  இந்நாளில் நம் நண்பர்களுடன் நாம் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய சில வாழ்த்துகளை இங்கே பார்க்கலாம்.


வாழ்த்துகளும், கவிதைகளும்:



  • நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை...

  • நம்மைப் பற்றிய ஆசிரியர்களின் சந்தேகங்களுக்குத் துணையாய்ப் புத்தகங்களைப் படபடக்கச் சொல்லிவிட்டு நிதானமாய்ப் பேசிக் கொண்டிருந்தோம் நாம்...

  • நம்மைப் பற்றிய ஆசிரியர்களின் சந்தேகங்களுக்குத் துணையாய்ப் புத்தகங்களைப் படபடக்கச் சொல்லிவிட்டு நிதானமாய்ப் பேசிக் கொண்டிருந்தோம் நாம்...

  • அந்த விளையாட்டுப் போட்டியைப் பார்க்க நாம் ஒன்றாகச் சென்றோம் இரசிக்கையில் இரண்டானோம் திரும்பினோம் மறுபடியும் ஒன்றாகவே...

  • போகிற இடத்தில் என்னை விட அழகாய் அறிவாய் ஒருவன் இருந்து விடுவானோ என்கிற பயம்நல்லவேளை நட்பிற்கு இல்லை...




  • நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கே வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த கருவி தான் நட்பு!

  • நம்முடைய வாழ்க்கைக்காக கவலைப்படுகின்ற ஒரு நண்பன் கிடைப்பது நம் வாழ்வில் கிடைத்த வரம்..அது என்றுமே நீ தான்...




  • சோகமான நேரம் கூட மாறிப்போகும்.. வலிகள் கூட தொலைந்து போகும்… நண்பர்கள் உடன் இருந்தால்..


இதுபோன்ற உங்களுக்கு வாழ்த்துகளையும், கவிதைகளையும் பகிர்ந்து நண்பர்கள் தினத்தை கொண்டாடுங்கள். இனம், மொழி, கலாசாரம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து மக்களிடையே உள்ள இடைவெளிகளைக் குறைக்க வழிவகுக்கும் இந்த நாளை வாழ்த்து அட்டைகள் தொடங்கி , சமூக வலைதளங்கள் , மெசெஞ்சர்கள் அனைத்திலும் வாழ்த்துகளைப் பகிர்ந்து மக்கள் அழகாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.


வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு நாடுகள்:


ஈக்வடார், எஸ்டோனியா, பின்லாந்து, மெக்சிகோ, வெனிசுலா மற்றும் டொமினிகன் குடியரசு போன்ற நாடுகளில் காதலர் தினம் மற்றும் நண்பர்கள் தினம் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் நண்பர்கள் தினம் ஏப்ரல் 16 அன்று கொண்டாடப்படுகிறது, அதே நேரத்தில் உக்ரைனியர்கள் ஜூன் 9 அன்று கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதும் பல தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க 


கருணாநிதி நூற்றாண்டு விழா.. பிரமாண்டமான நடைபெற்ற மாரத்தான் போட்டி.. 73 ஆயிரம் பேர் பங்கேற்பு