இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு  நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


கொரோனா பாதிப்பின் போது, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கும் ( கரீப் கல்யாண் அன்ன யோஜனா)திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இத்திட்டமானது( கரீப் கல்யாண் அன்ன யோஜனா) , நாளைமுதல் முடிவடையவுள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


கரிப் கல்யாண் அன்ன யோஜனா


கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மோடி அரசாங்கம் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஐந்து கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. அனைத்து தளவாடம் மற்றும் சேமிப்பு செலவுகள் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்று வருகிறது.






அதன் மூலம் கொரோனா காலத்தில் ஏழை மக்களின் உணவு ஆதாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலமாக, கூடுதலாக 5 கிலோ தானியங்கள் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.


இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, முதலில் 3 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 3 மாதங்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான் மூன்று மாதங்களுக்கும் நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.


தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இத்திட்டத்தின் ஏழாம் கட்ட மானியமாக ரூ.44,762 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.






தற்போது வரவிருக்கும் விஜய தசமி, தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கு, ஏழைகளுக்கு உதவும் வகையிலும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862944. மேலும் இத்திட்டம் குறித்தான விரிவான தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Also Read: நவராத்திரி விழா மற்றும் துர்கா பூஜை உள்ளிட்டவைகளை முன்னிட்டு இந்திய ரயில்வே இரயில் பயணிகளுக்கு விழாகால சிறப்பு உணவுகளை அறிமுகம் செய்துள்ளது. 


Also Read: DA Hike: 47 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது மத்திய அரசு...