அடுத்த 75 நாட்களுக்கு சிறப்பு இயக்கத்தின் கீழ், 18 வயதுக்கு மேலான அனைவரும் வெள்ளிக்கிழமை முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை அரசு மையங்களில் இலவசமாகப் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 






நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசின் 'Azadi Ka Amrit Mahotsav' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தடுப்பூசி இயக்கம் நடத்தப்பட உள்ளது. மூன்றாவது டோஸ் செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கையை மேம்படுத்தும் வகையில் இந்த இயக்கம் நடத்தப்பட உள்ளது.


இதுவரை, 18-59 வயதுக்குட்பட்ட 77 கோடி மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பூஸ்டர் டோஸ்களை செலுத்தி கொண்டுள்ளனர். இருப்பினும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ள 16 கோடி மக்களில் சுமார் 26 சதவீதம் பேர், சுகாதாரப் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோரும் பூஸ்டர் டோஸை செலுத்தி கொண்டுள்ளனர்.


இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்திய மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஒன்பது மாதங்களுக்கு முன்பு இரண்டாவது டோஸைப் பெற்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் பிற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுகள், இரண்டு டோஸ்களை போட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆன்டிபாடி அளவுகள் குறையும் என கூறின. ஒரு பூஸ்டர் டோஸை செலுத்தி கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


எனவே 18 முதல் 59 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கான சிறப்பு இயக்கத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது" என்றார்.


கடந்த வாரம், அனைத்து பயனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் பூஸ்டர் டோஸுக்கு இடையிலான இடைவெளியை ஒன்பதிலிருந்து ஆறு மாதங்களாக மத்திய சுகாதார அமைச்சகம் குறைத்தது. இது நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையைப் பின்பற்றி எடுக்கப்பட்டது.


தடுப்பூசி செலுத்தும் வேகத்தை விரைவுபடுத்தவும், பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கவும், ஜூன் 1 முதல் மாநிலங்கள் முழுவதும் 'ஹர் கர் தஸ்தக் பிரச்சாரம் 2.0' இன் இரண்டாவது சுற்று தொடங்கப்பட்டது. இரண்டு மாத திட்டம் தற்போது அமலில் உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண