2022-ம் ஆண்டுக்கான தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் 8 இடங்களை மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடிகளே பிடித்துள்ளன.


2015 முதல் ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி வருகிறது. இதில் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் (Teaching Learning & Resources), ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு (Graduation Outcome), வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் (Outreach & Inclusivity), கருத்து (Perception) ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.


அந்த வகையில் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தம் என்ற பிரிவிலும் பொறியியல் பிரிவிலும் ஐஐடி சென்னை முதலிடத்தில் உள்ளது.


 






ஒட்டுமொத்தக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல்


ஐஐடி சென்னை - 1
ஐஐஎஸ் பெங்களூரு  - 2
ஐஐடி பாம்பே - 3
ஐஐடி டெல்லி - 4
ஐஐடி கான்பூர் - 5
ஐஐடி காரக்பூர் - 6
ஐஐடி ரூர்க்கி - 7
ஐஐடி குவாஹாட்டி - 8
எய்ம்ஸ் டெல்லி - 9
ஜேஎன்யூ டெல்லி - 10


*


அதேபோல தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், முதுகலைப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் வெளியாகி உள்ளது. தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


மேலும் படிக்க:Rs 1000 Scholarship: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண