பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்:
பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர், மாநில சட்டம் ஒழுங்கு டிஜிப்பிக்கான ரேஸிலும் இருந்தவர்.
முன்னதாக தமிழக டிஜிபிக்கான ரேஸில் சஞ்சய் அரோரா முதல் இடத்தில் இருந்தார். இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் தான் தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக தீயணைப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பி,கே. ரவிக்கு தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி , காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவல்கள் இல்லை.
அதேநேரம், திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு இவர் மாற்றப்பட்டது காவல்துறையினரிடம் ஒரு விதமான சலசலப்பை ஏற்படுத்தியது.
விருப்ப ஓய்வு:
இச்சூழலில் தான் தமிழக அரசின் ஊர்க்காவல் படை தலைவராகக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், இவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. ஆனால், முன்னதாகவே பி.கே.ரவி விருப்ப ஓய்வு பெற்று விட்டார்.
காங்கிரஸ் கட்சியில்:
இதனிடையே, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பி.கே,ரவி அம்மாநில காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில், இன்று (நவம்பர் 2) டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
மேலும், வரும் 2024 ஆம் ஆண்டில் பிகார் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் இவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது. தமிழக தீயணப்புத்துறையில் இருந்த போது விபத்தில்லா தீபாவளி என்ற முன்னெடுப்பை எடுத்தவர்.
அதேபோல், தனது 34 ஆண்டுகால போலீஸ் வாழ்க்கையில் பல்வேறு வழக்குகளை திறன்பட விசாரணை செய்து அதற்கான தண்டனைகளையும் வாங்கி கொடுத்தவர் பி.கே.ரவி.
முன்னாதாக தமிழ்நாட்டில் பணியாற்றிய டிஜிபி கருணாசாகர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Mahua Moitra: 'கேவலமான கேள்விகள் கேட்கிறார்கள்' - மக்களவை நெறிமுறைக் குழுவை விளாசித் தள்ளிய மஹூவா மொய்த்ரா!
மேலும் படிக்க: Arvind Kejriwal: கைது செய்யப்படுகிறாரா முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்? இந்தியக் கூட்டணியை ஒழிக்க சதி என குற்றச்சாட்டு..