ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அசோக் கெலாய் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 


இன்னும் விடாத கொரோனா:


உலகம் முழுவதும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இன்னும் முழுவதுமாக முடிவடையவில்லை. மாறிவரும் காலநிலையால், நாட்டில் பல இடங்களில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் . இது தவிர, பன்றிக் காய்ச்சலும் இவருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “ நீங்கள் அனைவரும் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.” என பதிவிட்டுள்ளார். 


மாறிவரும் வானிலைக்கு மத்தியில், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏனெனில் ராஜஸ்தானில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை பருவகால நோய்கள் தாக்கத் தொடங்கியுள்ளன.


அதிகரித்து வரும் குளிர் காரணமாக, முதியோர்களுக்கு பருவகால நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. மாறிவரும் காலநிலையில் இது ஒரு சாதாரண விஷயம் என்றாலும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொல்லை தருகிறது. காய்ச்சல், இருமல், சளி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பருவகால நோய்களும் இதயத் தாக்குதல் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.


சுகாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? 


நாடு முழுவதும் தற்போது காலநிலை மாறி வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான குளிர் காரணமாக வட இந்தியாவே தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு குறைந்தாலும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. குளிர்காலம் காரணமாக இந்தியாவில் தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குளிர் காலநிலை காரணமாக கொரோனா வைரஸ் மற்றும் பிற தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைப்புகள் கூறுகின்றன.


டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குளிர்காலக் காய்ச்சல் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனா மற்றும் காய்ச்சல் இரண்டிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அனைவரும் முகமூடி அணிவதுடன் கொரோனா காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும்.