இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டிகள் தொடர்பாகவும் சில சமூக பிரச்னைகள் தொடர்பாகவும் பதிவுகளை செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு போக்குவரத்து காவலர் ஒருவர் செய்த நெகழ்ச்சியான சம்பவம் தொடர்பாக அவர் ஒரு பதிவை செய்துள்ளார். 


இது தொடர்பாக அவர்,”சமீபத்தில் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கியிருந்தார். அவர் தற்போது நன்றாக குணம் அடைந்து வருகிறார். அவர் குணம் அடைய முக்கிய காரணமாக இருந்தவர் ஒரு போக்குவரத்து காவலர். அவருடைய சரியான நேரத்து உதவு என்னுடயை நண்பரின் நலனிற்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அவர் விபத்து நடந்த இடத்திலிருந்து உடனடியாக ஆட்டோ பிடித்து என்னுடைய நண்பரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அத்துடன் அவருக்கு முதுகு தண்டில் அடிபட்டதை சரியாக உணர்ந்து அது நகராமல் பார்த்து கொண்டுள்ளார்.






அவரின் இந்த செயல் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. நான் அவரை நேரடியாக சந்தித்து என்னுடைய நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். இவரை போல் பலரும் நம்மை சுற்றி இருக்கின்றனர். இந்த மாதிரியான மனிதர்களால் உலகம் எப்போதும் மிகவும் அழகானதாக மாறுகிறது. இந்த மாதிரியான மனிதர்களை நீங்கள் பார்க்கும்போது நிச்சயம் நன்றி தெரிவியுங்கள். அதிலும் குறிப்பாக மக்கள் சேவை பணியில் இருக்கும்  நபர்களை நிச்சயம் பாராட்டுங்கள். அவர்கள் யாருக்கும் தெரியாமல் பிறருடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயத்தை செய்து கொண்டு வருகிறார்கள். 


இந்தியாவில் பணியாற்றி வரும் அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நாம் அனைவரும் நம்மால் முடிந்த வரை போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிப்போம். அதில் எந்தவித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் முறையாக கடைபிடிப்போம். ஏனென்றால் நீங்கள் உங்களுடைய நேரத்தை சேமிக்கிறேன் என்று எடுக்கும் சில முடிவுகள் பிறருடைய வாழ்க்கைக்கு ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 


சச்சின் டெண்டுல்கரின் இந்தப் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பலரும் போக்குவரத்து காவலர்களுக்கு தங்களுடைய நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். அவரின் இந்தப் பதிவு நல்ல விழிப்புணர்வு பதிவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: சொந்த சகோதரியை திருமணம் செய்த சம்பவத்தால் பரபரப்பு.. அதிர்ச்சி காரணம்.. பதிவான எஃப்.ஐ.ஆர்