இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கான திருமணங்களுக்கு பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் தாலிக்கு தங்கம் என்ற திட்டம் மிகவும் பிரபலமான ஒன்று. அந்தவகையில் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் அமலில் உள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பெண்ணின் திருமணம் தொடர்பாக ஒரு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்காக ஆசைப்பட்டு ஒருவர் செய்த காரீயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சம்யூக் விவாஹ் யோஜனா திட்டம் என்ற ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெறும் தம்பதிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். அதாவது 20 ஆயிரம் ரூபாய் மணமகளின் பெயரில் வங்கியில் செலுத்தப்படும். அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தரப்படும். கடந்த 11ஆம் தேதி இத்திட்டத்தின் கீழ் 51 ஜோடிகளுக்கு துண்ட்லா பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியும் திருமணம் செய்துள்ளது. அந்த ஜோடி அரசின் திட்ட உதவியை பெற வந்தபோது அவர்கள் செய்த போலியான செயல் அனைவருக்கும் தெரியவந்தது. அதாவது அந்த தம்பதியாக இருந்த மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் உண்மையில் அண்ணன்-தங்கை என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். கிராம மக்களின் புகாரை ஏற்று அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபரின் ஆதார் கார்டு விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த போலி தம்பதிகளுக்கு வழங்க இருந்த திட்டம் சார்ந்த உதவிகளையும் அதிகாரிகள் தற்போது ரத்து செய்துள்ளனர். அத்துடன் அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசின் திட்ட உதவியை பெறுவதற்காக ஒரு சொந்த அண்ணன் தங்கையை திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று அரசு திட்டங்களை பெற பலர் சமீபத்தில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பலரும் தொடர்ந்து முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 101% எங்கள் வெற்றி உறுதி.. அம்ரிந்தர் சிங் பாஜகவுடன் கூட்டணி