புதுச்சேரி: சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்த நடிகர் சந்தானம் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். படப்பிடிப்புக்கான வரியைக் குறைக்கக் கோரியதையடுத்து, விடுப்பில் சென்றுள்ள ஆட்சியர் வந்தவுடன் வரி குறைக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார். புதுச்சேரி மாநிலம் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழித் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறுவதுண்டு. புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்காக ஒரு இடத்தில் காட்சிகளை எடுப்பதற்கு, புதுச்சேரி நகராட்சி சார்பில் 5 ஆயிரம் வரி வசூல் செய்து வந்த நிலையில், திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வரிவிதிப்புக் கட்டணம் 28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.


100 கொடுத்தா 200... ஆசை காட்டி ரூ.12½ லட்சம் அபேஸ் செய்த அரசு ஊழியர் கைது!


கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டது. பிற மாநிலங்களைக் காட்டிலும் இந்த வரிவிதிப்பு குறைவு என்றாலும், திரைப்படத் துறையினர், உயர்த்திய வரிவிதிப்பைக் குறைக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


திருக்கோவிலூர் அருகே குழந்தையை குளத்தில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி


வருவாய் குறைவாக உள்ள சூழலிலும் பிற மாநிலங்களை விடக் கட்டணம் குறைவாக இருந்தாலும் திரை நட்சத்திரங்கள் இக்கட்டணத்தைக் குறைக்குமாறு முதல்வர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர். புதுச்சேரிக்குப் படப்பிடிப்புக்கு வந்த நடிகர்களான கே.பாக்யராஜ், விஜய் சேதுபதி, பிரசாந்த் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் புதுச்சேரியில் முழுக்கப் படமாக்கவுள்ள புதிய படப்பிடிப்புக்காக புதுச்சேரி வந்த நடிகர் சந்தானம் முதல்வர் ரங்கசாமியைச் சட்டப் பேரவை வளாகத்தில் இன்று சந்தித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.


100 கொடுத்தா 200... ஆசை காட்டி ரூ.12½ லட்சம் அபேஸ் செய்த அரசு ஊழியர் கைது!


அப்போது நடிகர் சந்தானம், "புதுச்சேரியில் 40 நாட்களுக்குப் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். படப்பிடிப்புக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதைக் குறைக்க வேண்டும்" என்று கேட்டார். அதற்கு முதல்வர் ரங்கசாமி, "ஆட்சியர் ஊரில் இல்லை. அவர் வந்தவுடன் கட்டணத்தைக் குறைக்கவுள்ளோம்" என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சந்தானம், "படப்பிடிப்புக் கட்டணத்தைக் குறைக்கக் கோரினோம். முழு திரைப்படத்தையும் இங்கு படமாக்கவுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண