M S Gill died: இந்திய தேர்தல் முறையேயே மாற்றிய முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி எம்.எஸ். கில் காலமானார்..

Former Chief Election Commissioners: பஞ்சாபை சேர்ந்த நாட்டின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான எம்.எஸ். கில் காலமானார்.

Continues below advertisement

Former Chief Election Commissioners:  முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான எம்.எஸ். கில், உடல்நலக் குறைபாட்டால் காலமானார்.

Continues below advertisement

எம்.எஸ். கில் காலமானார்..

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியும், காங்கிரஸ் தலைவருமான மனோகர் சிங் கில், தனது 86வது வயதில் காலமானார். வயது மூப்பு தொடர்புடைய உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது. கில் பஞ்சாப் கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, 2001ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2004ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார். தொடர்ந்து 2004 முதல் 2016 வரை ராஜ்யசபாவில் பஞ்சாப்பை பிரதிநிதித்துவப்படுத்தினார். அப்போது அவர் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும்,   புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில், தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்த கில், 86வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் டெல்லியில் இன்று நடைபெற உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் அறிமுகம்:

கில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது தான், இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது நாட்டில் வாக்குப்பதிவு முறைகேடுகளை தடுக்க பெரிதும் உதவியது. அவர் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது 1998ம் ஆண்டு 12வது மக்களவைக்கும். 1999ம் ஆண்டு 13வது மக்களவைக்குமான பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தினார்.  1997ம் ஆண்டு 11வது குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவருக்கான தேர்தல், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அவரது பணியை பாராட்டி பத்ம விபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

எழுத்தாளராக கோலோச்சிய கில்:

கில் ஆட்சியாளர் மற்றும் அரசியல்வாதி என்பதோடு ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் அறிஞராகவும் திகழ்ந்தார்.  "ஹிமாலயன் வொண்டர்: டிராவல்ஸ் இன் லாஹவுல் அண்ட் ஸ்பிட்டி",  "ஒரு இந்திய வெற்றிக் கதை" போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். பஞ்சாப் மற்றும் இந்தியாவில் பண்ணை பிரச்சனைகள் பற்றி எடுத்துரைத்த, "விவசாயம் கூட்டுறவுகள்: பஞ்சாபின் ஒரு வழக்கு ஆய்வு" எனும் புத்தகம் அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது.

தலைவர்கள் இரங்கல்:

கில்லின் மறைவர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ கில்லின் மரணம் வருத்தமளிப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டுவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கில்லின் தலைமைத்துவமும், தேர்தல் செயல்பாட்டில் உள்ள அர்ப்பணிப்பும், தேர்தல் கமிஷனுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என” தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola