ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பாரம்பரிபரிய புத்தாண்டைக் குறிக்கும்  உகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆந்திரா மாநிலம்  கர்னூல் மாவட்டத்தில் உள்ள மக்கள் முகக்கவசம், சமூக விலகல் போன்ற அடிப்படை கொரோனா தடுப்பு நடைமுறையை பின்பற்றாமல் பெரும் கூட்டமாக வரட்டியால் தாக்கிக் கொள்ளும் திருவிழா நடைபெற்றது. இது தொடர்பான அதிர்ச்சிக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.   






   கர்னூல் மாவட்டம் கயிறுபள்ள கிராமத்தில் ஆண்டுதோறும், வரட்டியால் பக்தர்கள் தாக்கிக் கொள்ளும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்வு 'பிடக்கல்போர்' என்று அழைக்கப்படுகிறது. ஹரித்வாரில் உள்ள கும்பமேளாவில் மாஸ்க் மறந்து, சமூக இடைவெளியை துறந்து பக்தர்கள் ஒன்றுகூடிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலானது. கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் மட்டும் கடந்த 4 நாட்களில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் கொரோனா தடுப்பு விதிகளை மறந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.