தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சிறைக்கு பதிலாக வீட்டு காவலில் வைக்கக்கோரி தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வருகிறது.
சந்திரபாபுவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைக்குமாறு சந்திரபாபுவின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீராம், பொன்னவோலு சுதாகர் ரெட்டி, சந்திரபாபு வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா ஆகியோர் நேற்று காலை வாதங்களை முன்வைத்தனர். மூன்று சுற்று வாதங்களுக்குப் பிறகு, வீட்டுக்காவல் மனு மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏசிபி நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
சந்திரபாபுவுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை சிறையில் அடைப்பது ஏற்புடையதல்ல என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. (ஹவுஸ் ரிமாண்ட்) வீட்டு காவல் வழங்க வேண்டும் என்றும், கடந்த காலங்களில் அவர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் கூறினார். ஹவுஸ் அரெஸ்ட் மனு மீதான வாதங்களின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா குறிப்பிட்டார். மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் ஆந்திர அரசு தலையிட கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் லுத்ரா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கவுதம் நவர்க்கர் வழக்கில் ஹவுஸ் ரிமாண்ட் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அவர் நினைவுபடுத்தினார்.
சிஐடி சார்பில், ஏஏஜி பொன்னவொலு சுதாகர் ரெட்டி வாதிடுகையில், சந்திரபாபு கைது செய்யப்படும் போது அவர் ஆரோக்கியமாக இருந்தார். சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளதால் வீட்டுக்காவலில் வைக்கக்கூடாது என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சந்திரபாபு வீட்டுக்காவலுக்கு வாய்ப்பு கொடுத்தால் வழக்கு நிச்சயம் பாதிக்கப்படும் என்றும் சிஆர்சிபியில் வீட்டுக்காவலில்லை என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஏசிபி நீதிமன்றம், இது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் மேலும் விளக்கம் கேட்டுள்ளது. வீட்டுக்காவலில் அனுமதி பெற்ற வழக்குகளின் முழு விவரங்களையும் தருமாறு வழக்கறிஞர்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
அரசியல் காரணங்களுக்காகவே சந்திரபாபு கைது:
அரசியல் காரணங்களுக்காகவே முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதாகவும், எஃஃப்ஐஆரில் இல்லாத அவரது பெயரை அவசரமாக சேர்த்து கைது செய்ய சதி நடந்துள்ளதாக தெலுங்கு தேச கட்சியினர் குற்றம் சாட்டினர். நந்தியாலாவில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) காலை ஏசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரபாபு சார்பில் சித்தார்த்த லுத்ராவும், சிஐடி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுதாகர் ரெட்டியும் பேசினர். நீண்ட வாதங்களுக்குப் பிறகு, சந்திரபாபுவை நீதிமன்றம் 2 வாரங்கள் ரிமாண்ட் செய்தது. பின்னர் போலீசார் சந்திரபாபுவை சாலை வழியாக ராஜமுந்திரி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
உடல்நிலையை கருத்தில்கொண்டு வீட்டு சாப்பாடு:
ஞாயிற்றுக்கிழமை சந்திரபாபுவுக்கு வீட்டுச் சாப்பாடு வழங்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டதையடுத்து, திங்கள்கிழமை மதியம் சந்திரபாபுவுக்கு குடும்பத்தினர் பிரவுன் ரைஸ், பனீர் கறி மற்றும் தயிர் ஆகியவற்றை அனுப்பி வைத்தனர். அவரது வயதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு உதவியாளருடன் சிறப்பு வசதிகள் ராஜமுந்திரி சிறையில் வழங்கப்பட்டன.
வீட்டு காவலுக்கு அவசியம் என்ன..?
சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது மாவோயிஸ்டுகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாகவே தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மேற்கோள் காட்டி வீட்டு சிறைக்கு மாற்றுமாறு சந்திரபாபு தரப்பில் ஏசிபி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.