ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும் நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு குறித்த தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
'உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறை: சவால்களும் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டிய வழியும்' என்ற தலைப்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று விளக்கவுரை நடத்தப்பட்டது.
இதில், பங்கேற்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "மற்றொரு 9/11 இரட்டை கோபுர தாக்குதலையோ 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலையோ நடத்த அனுமதிக்க முடியாது.
கடந்த 20 ஆண்டுகளில், பயங்கரவாதம் குறிப்பிடத்தக்க வகையில் எதிர்க்கப்பட்டுள்ளது. பயங்கரவாத்தை நியாயப்படுத்துவது சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது.
இந்த பணி இன்னும் செயலில் உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது ஓய்வு இல்லாத போராகும். உலக கவனக்குறைவு அல்லது வியூக ரீதியான சமரசங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சில் உலகளவில் ஒன்று சேர்ந்து வழிநடத்த வேண்டும்" என்றார்.
தற்போது, பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு சந்தித்து வரும் முக்கிய சவால்களை மேற்கோள்காட்டி பேசிய ஜெய்சங்கர், "ஒன்று, கமிஷன் பெற்று கொண்டோ புறக்கணிப்பை மேற்கொண்டோ பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது. இந்த குற்ற செயலில் அரசு பங்களிப்பு இருப்பது. கடந்த காலத்தைப் போல பயங்கரவாத்தை செய்துவிட்டு அதை நியாயப்படுத்தி பேசுவதை உலகம் ஏற்று கொள்ள தயாராக இல்லை.
என்ன விளக்கம் அளித்தாலும் பயங்கரவாதம் பயங்கரவாதம்தான். இத்தகைய செயல்கள் யாருடைய மண்ணில் இருந்து திட்டமிடப்பட்டு ஆதரிக்கப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன என்பது அந்தந்த அரசின் பொறுப்புகள் என்ற கேள்வி இப்போது எழுகிறது" என்றார்.
இரண்டாவது சவால் குறித்து விரிவாக பேசிய அவர், "பயங்கரவாத எதிர்ப்புக்கான பலதரப்பட்ட பேச்சுவார்த்தை அமைப்பையும் அதன் செயல்பாடுகளில் உள்ள நேர்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல்.
சில சமயங்களில் அவை வெளிப்படைத்தன்மையற்று இருக்கிறது. சில சமயம், திட்டமிட்டு செயல்படுகிறது. சில சமயங்களில் ஆதாரம் இன்றி செயல்படுகிறது" என்றார்.
பயங்கரவாத எதிர்ப்பில் உள்ள இரட்டை நிலைபாடு குறித்து பேசிய அவர், "ஒரே அளவுகோல்கள் பயங்கரவாதிகளை அனுமதிப்பதற்கும் வழக்குத் தொடரவும் பயன்படுத்தப்படுவதில்லை. பயங்கரவாதத்தின் உரிமையானது அதன் குற்றச்செயல் அல்லது அதன் விளைவுகளை விட முக்கியமானது என்று சில நேரங்களில் தோன்றும்.
நான்காவது சவால் என்னவென்றால், பயங்கரவாதிகளால் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது. இது நமது போரின் அடுத்த எல்லையாக இருக்க வாய்ப்புள்ளது" என்றார்.