குஜராத்தின் சூரத்தில் புதன்கிழமை இடைவிடாது பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் பருவ மழையைத் தொடர்ந்து சூரத்தின் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. சூரத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியின் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. 


 






கனமழைக்கு மத்தியில் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு நிர்வாகம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் பருவமழையால் சூரத்தில் உள்ள மிதி காதியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அகமதாபாத்திலும் திங்கள்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.


ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை தெற்கு குஜராத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.


 






வடக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கிழக்கு-மத்திய இந்தியாவில் தீவிரமான மற்றும் பரவலான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


மத்திய இந்தியாவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிக மழை பெய்துள்ளது. முக்கியமாக பருவமழை அதன் இயல்பான நிலையில் இருந்து தெற்கே இருக்கிறது. வங்காள விரிகுடாவின் தெற்கே சிறிது சிறிதாக சூறாவளி சுழற்சிகள் உருவாகியுள்ளது.


வடக்கு வங்கக்கடலில் வலுப்பெறும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மத்திய இந்தியாவை கடந்து ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்திலும் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் இதுவரை, பருவமழை 9 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண