Flipkart : ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த ஒருவருக்கு சோப் கிடைக்க பெற்ற புகாரில் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. நிறுவனங்களும் பயனாளர்களின் தேவையை உணர்ந்து பண்டிகை காலம், விழாக் காலங்களில் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. ஆன்லைன் வணிகத்தில் ஆர்டர் செய்ததற்கு மாறாக வேறொரு பொருட்கள் டெலிவரி செய்யப்படும் செய்திகளை நாம் அடிக்கடி கேட்கிறோம் இல்லையா? அப்படி ஒரு சமபவம் டெல்லி மாநிலத்தில் நடந்துள்ளது.
ஐபோனுக்கு பதில் துணி சோப்:
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மாணவர் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப் கார்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஐபோன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்த ஆர்டருக்கான பார்சலை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் அவர் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதில் 140 கிராம் எடையுள்ள நிர்மா என்ற சோப் மற்றும் சிறிய கிபேட் போன் அதில் இருந்துள்ளது. ஐபோன் என்று நினைத்து ரூ.48,999 செலுத்தியுள்ளார். இதனை அடுத்து, அந்த மாணவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
ஐபோனுடன் 25 ஆயிரம் இழப்பீடு:
கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் 8 வாரங்களுக்குள் ஐபோனுக்கு செலவு செய்த தொகையுடன் ரூ.25,000 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், "தற்போது ஆன்லைன் ஷாப்பிங் ஆப் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தயாரிப்புகளை விற்ற பிறகு ஆன்லைன் நிறுவனங்களின் பொறுப்புகள் முடிவடையாது. அவர்களின் பிரச்சனைக்கு உரிய பதிலளித்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
நிறுவனங்கள் வாடிக்கையார்களை ஏமாற்றி, அவர்களின் பணத்தை பெற்றுக் கொண்டு தவறான பொருட்களை அனுப்புவதன் மூலமோ, நுகர்வோரின் பணத்தை அபகரிக்க எந்த உரிமையும் கிடையாது” என்று ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
அலட்சியமாக பதிலளித்த ப்ளிப்கார்ட்:
முன்னதாக, இதுபோன்று சமீபத்தில், டெல்லியில் ஒரு நபர் தந்தைக்காக ப்ளிப்கார்ட்டில் விலையுயர்ந்த லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்த பார்சலில் காதி கிராப்ட் சார்பில் தயாரிக்கப்படும் துணி துவைக்கும் சோப்பு வந்துள்ளது. இதைக்கண்டு யாஷஸ்வி ஷர்மா அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுதொடர்பாக ப்ளிப்கார்ட்டை தொடர்பு கொண்டபோது, ப்ளிப்கார்ட் நிறுவனத்தினர் ஓ.டி.பி.யை அளிப்பதற்கு முன்பு பொருட்களை சரிபார்க்காததற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அலட்சியமாக பதிலளித்ததாகவும் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். மீபகாலமாக, இணையத்தில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்று ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தக்க தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க