கேரளாவில் விழிஞ்சத்தை சேர்ந்த மீனவர் குழு, 28 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் வாந்தியைக் கண்டுபிடித்து அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடலில் சிக்கிய 28.400 கிலோ எடையுள்ள வாந்தியை மீனவர்கள் கண்டுபிடித்து வெள்ளிக்கிழமை மாலை கரைக்குக் கொண்டு வந்து கடலோர போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கடலோர போலீஸார் பேசுகையில், "மீனவர்கள் வாந்தியை எங்களிடம் ஒப்படைத்தனர். நாங்கள் வனத் துறைக்குத் தகவல் கொடுத்தோம். அவர்கள் எங்களிடமிருந்து அதைப் பெற்றனர்" என்றார்.
அதை உறுதி செய்வதற்காக வனத்துறையினர் வாந்தியை நகரிலுள்ள ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்திற்கு கொண்டு சென்றனர். வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படும் ஒரு கிலோ அம்பர்கிரிஸ் என்படும் வாந்தி சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய் விலைக்கு போகலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தியாவில் திமிங்கலம் ஒரு அழிந்து வரும் இனம் என்பதால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு, விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்