ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் புரானா பஜார் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையுடன் கூடிய நர்சிங் ஹோம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனை குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஸ்டோர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்துவர்கள் அலறியடித்து ஓட முயன்றனர். இந்த தீயானாது மெல்ல மெல்ல பரவி மருத்துவமனையின் 2வது மாடியை சூழ்ந்து கொண்டது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில் மருத்துவர் விகாஸ் ஹஸ்ரா, அவரது மனைவி பிரேமா ஹஸ்ரா, உரிமையாளரின் மருமகன் சோஹன் கமாரி, வீட்டு பெண் தாரா தேவி ஆகியோர் தீ விபத்தில் மூச்சு திணறி இறந்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் தெரிந்து, சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு துறையினர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்த 9 பேரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவர்களின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்க்கண்ட் முதல்வர் இரங்கல்
தன்பாத்தில் உள்ள மருத்துவனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, "தன்பாத்தில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் தம்பதிகளான விகாஸ் மற்றும் டாக்டர் பிரேமா ஹஸ்ரா உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர்களை இழந்தும் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.