தமிழ்நாடு:
- இந்தியாவில் மிகவும் பழமையான மொழி தமிழ் தான் என தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியுள்ளார். காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல தொடர்புகள் இருப்பதாகவும் பேச்சு.
- தமிழ்நாடு நிதித்துறைக்கான புதிய வலைதளப் பக்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மாநில பொதுத்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க ஏற்பாடு.
- அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என கையெழுத்து இட்டு அனுப்பும் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் முறையீடு.
- நன்றாக சென்ற சேது சமுத்திர திட்டத்தினை வேண்டுமென்றே நிறுத்தியதாக திமுக எம்.பி டி.ஆர். பாலு குற்றச்சாட்டு. பாஜக ஒருபோதும் வெற்றி பெறதாது எனவும் பேச்சு.
- சேலத்தில் பெரும் சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு. பொதுமக்கள் பீதி.
- கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் கட்டுப்பாட்டுடன் இருக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில்.
- மலை பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தில் முன்னேற்றம்; தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு.
- நாமக்கல் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி; மூன்று பேரை கைது செய்தது காவல்துறை.
- நான் திமுகவில் இணையப்போவதாக வரும் தகவல் பொய்யானது - தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியா:
- நாட்டில் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மொபைலில் செலவிடுவது கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேச்சு.
- பிபிசி வெளியிட்ட ஆவணபட விவகாரத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளு - முள்ளு; சென்னை பல்கலைக் கழகத்தில் திரையிட மறுத்ததால் மடிக்கணினியில் பார்த்ததாக மாணவர் அமைப்பினர் பேட்டி.
- கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் 2 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி சிறப்பு வழிபாடு. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
- காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது.
- 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் பிப்ரவரி மாதத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
உலகம்
- அமெரிக்க அதிபராக இருந்தால் 24 மணி நேரத்தில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திவிடுவேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பேட்டி.
- இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 3, 4ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
- 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலககோப்பை போட்டி; நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
- இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.