கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இந்த சந்திப்பு நடந்து கிட்டத்தட்ட 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், பிடிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு புகைப்படங்களுடன் கூடிய செய்தியை பகிர்ந்திருக்கிறார். அதில், “கடந்த மாத இறுதியில் டெல்லி சென்றிருந்த எங்களுக்கு அன்பான வரவேற்பளித்த மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி. வழக்கமாக தமிழ்நாட்டிற்கு வழங்கும் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவோடு இம்முறை மதுரை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உடனான சில பொதுவான குடும்ப வரலாறு குறித்து அவர் விளக்கினார்” என தெரிவித்திருக்கிறார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. 






முன்னதாக, டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த பிறகு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தியை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. 




பிற முக்கியச் செய்திகள்:









மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண