Fathers Day History: அப்பா, அய்யா, நைனா, வாப்பா என எண்ட மொழியாக இருந்தாலும், யாருடைய வாழ்க்கையிலும் ஒரு தந்தையின் பங்கை புறக்கணிக்க முடியாது. தந்தையர்களின் நிலையான அன்பு, ஆதரவு மற்றும் தந்தையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அதன் அடிப்படையில் ஜூன் 16ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளை போல, தந்தையர் தினத்திற்கு என்று குறிப்பிட்ட தேதி இல்லை. அது ஏன் என்று இப்போது பார்க்கலாம். 


தந்தையர் தினம் இந்த காரணத்திற்காகதான் கொண்டாடப்படுகிறது என்ற குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை. தந்தையர் தினம் தேதி குறித்து சில கருத்து வேறுபாடுகள், வெவ்வெறு கதைகள் உள்ளன. 


சுரங்க விபத்தில் உயிரிழந்தோர் நினைவாக..


தந்தையர் தினத்தின் தோற்றத்தின் வரலாறு சுரங்கப் பேரழிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 1907ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு வர்ஜீனியாவில் மோனோகிராப் சுரங்க விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 361 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில், சுமார் 1000 குழந்தைகள் அனாதைகள் ஆகின. 


இதையடுத்து, மேற்கு வர்ஜீனியாவுக்கு அருகிலுள்ள தேவாலயம் ஜூலை 5, 1908 அன்று அந்த தந்தையர் அனைவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இது நினைவு தினமாகவே கொண்டாடப்பட்டதே தவிர, தந்தையர் தினம் அல்ல. 


அடுத்த ஆண்டில் தந்தையர் தினம் முதன்முதலில் ராணுவ வீரர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவரின் மகள் சோனோரா ஸ்மார்ட் டோடாவால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறுவயதிலேயே தாயை இழந்துள்ளார் சோனோரா ஸ்மார்ட் டோடா. மேலும், சோனோரா உட்பட ஆறு குழந்தைகளை தனியாக வளர்த்தார். அப்போதும் கூட தன் தந்தை வேறு யாரையும் திருமணம் செய்யாமல் தனக்காக அனைத்து சுகத்தையும் மறந்து வாழ்ந்தார். இதையடுத்து, அன்னையர் தினம் போல் தந்தையர் தினத்தை ஏன் கொண்டாடக்கூடாது என்று தோடா நினைத்துள்ளார். இதையடுத்து, தன் தந்தையின் பிறந்தநாளான ஜூன் 5ம் தேதி தந்தையர் தினம் என அறிவித்து கொண்டாடியுள்ளார். 


தந்தையர் தினம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு:


இந்த செய்திகள் அடுத்தடுத்து பரவே அன்னையர் தினம் போல், தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் 1914 இல் அதிகாரப்பூர்வமாக மே மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் நிறுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இருப்பினும், அன்னையர் தினத்துடன் ஒப்பிடும்போது, ​​தந்தையர் தினம் பரவ அதிக ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.


தொடர்ந்து, 1916 ஆம் ஆண்டில், அதிபர் உட்ரோ வில்சன் வாஷிங்டனில் ஒரு பொத்தானை அழுத்தி, ஸ்போகேன் நகரத்தில் கொடியை உயர்த்தி இந்த நாளைக் கௌரவித்தார். 1924 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் தந்தையர் தினத்தை கொண்டாடுமாறு மாநில அரசாங்கங்களை வலியுறுத்தினார். ஆனால் அப்போதும் அதற்கு தேசிய நாள் அந்தஸ்து கிடைக்கவில்லை. இறுதியாக 1966ல் அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன், ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தைகளை கௌரவிக்கும் அதிபர் பிரகடனத்தை வெளியிட்டார். தந்தையர் தினத்தை தேசிய விடுமுறையாக மாற்றியது அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.


இதன் காரணமாக, அன்னையர் தினம் நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1972 இல் தந்தையர் தினம் தொடங்கியது.