மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சப்யாஸ்சி முகர்ஜி. இவர் தன்னுடைய புதிய வடிவமைப்பு தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் தன்னுடைய புதிய தாலி வடிவமைப்பு தொடர்பான படத்தை பதிவிட்டிருந்தார். அந்தப் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது சர்ச்சையாக காரணம் என்ன?


சப்யாஸ்சி முகர்ஜி வடிவமைத்துள்ள புதிய 18 கேரட் தங்கம் மற்றும் கருப்பு ஒன்க்ஸ் முத்துகள் உட்பட் அனைத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தாலி தொடர்பாக அவர் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் இருப்பவர்கள் இந்த தாலியை போட்டு கொண்டு உள்ளாடை மட்டுமே அணிந்து போஸ் கொடுக்கின்றனர். அவர் இந்த படத்தை பதிவிட்டு தன்னுடைய புதிய தாலி தொடர்பாக ஒரு விளம்பரத்தை செய்து இருந்தார். 


இந்நிலையில் அந்தப் படத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் அது அவர்களுடைய மதத்தை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “சப்யாஸ்சி முகர்ஜியின் மங்கள் சுத்ரா தொடர்பான விளம்பரம் மிகவும் கண்டனத்திற்கு உரியது. அதை அவர் 24 மணி நேரத்திற்குள் எடுக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கையை சந்திக்க நேரிடும்” எனக் கூறினார். 


 






அதேபோல் பாஜகவின் சட்ட ஆலோசகர் சப்யாஸ்சி முகர்ஜிக்கு ஒரு சட்ட நோட்டீஸை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், “இந்த புதிய விளம்பரத்தின் மூலம் அவர் இந்து மக்களின் உணர்வை காயப்படுத்தியுள்ளார். மேலும் இந்துகளின் திருமணம் தொடர்பான புனித உணர்வையும் இது சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே இதை அவர் நீக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இந்த எதிர்ப்பை தொடர்ந்து சப்யாஸ்சி முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவிலிருந்து அந்த விளம்பரம் தொடர்பான படத்தை நீக்கியுள்ளார். அந்த தாலியின் விலை சுமார் 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் என்று அந்த விளம்பரத்தில் பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 2ம் வகுப்பு மாணவனின் காலைப்பிடித்து தலைகீழாக தொங்கவிட்ட சைக்கோ ஆசிரியர்..!