டெல்லி காசியாப்பூர் எல்லையில் 123 நாட்களாகப் போராடிவரும் விவசாயிகள் இன்று ஹோலி விழாவைக் கொண்டாடினர். விவசாயச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக மத்திய அரசு தங்களது கோரிக்கைக்குச் செவி சாய்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி காசியாப்பூர் எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் மத்திய அரசும் இந்த விவகாரத்தில் மௌனமாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையே இன்று போராட்டக்களத்துக்கு வந்து சேர்ந்த சில விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசியும் ஆடியும் பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.