மஹாராஷ்டிராவில் திராவிட் என்ற உயர்நிலை பள்ளியில் சில்வர் ஓக் வகையை சார்ந்த மரம் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக பட்டுப்போன நிலையில் இருந்துவந்தது. பட்டுப்போன அந்த மரத்தை கண்ட அப்பள்ளி நிர்வாகம் தற்போது அதை 6 அடி உயரமுள்ள அழகிய பென்சிலாக உருமாற்றியுள்ளது. மிக அழகாக காட்சிதரும் இந்த பென்சில் காண்போரை ஈர்த்து வருகிறது.
மத்திய அரசின் "சர்வ சிக்ஷா அபியான்" திட்டத்தின் லோகோவும் அந்த 6 அடி பென்சிலில் பதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திராவிட் பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில் அந்த பள்ளி நிர்வாகம் சில தச்சு வேலையாட்களை நியமித்து, பட்டுப்போன மரத்திற்கு அழகிய கலைவடிவத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பென்சில் மரம் தற்போது உள்ளூர் மக்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது.