முட்டையை வைத்து பல உணவுகள் தயாரிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். குறிப்பாக பல வகை ஆம்லெட்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில்  வட இந்தியாவில் ஒரு கடையில் குளிர்பானமான ஃபாண்டாவை வைத்து ஆம்லெட் போட்டு மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அது எங்கே? அந்த ஆம்லெட்டின் விலை என்ன?


குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஒரு புதுவிதமான ஆம்லெட் போடப்படுவதாக தகவல் பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து உணவு தொடர்பாக ரிவ்யூ செய்யும்  யூடியூப் செனல் ஒன்று அந்த கடையில் போடப்படும் இந்த ஆம்லெட் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குளிர்பானமான ஃபாண்டாவை பயன்படுத்தி அவர்கள் ஆம்லெட் செய்யும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த ஆம்லெட் அங்கு சுமார் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த வீடியோவில் முதலில் வழக்கமாக ஆம்லெட் போடும் வகையில் எல்லா பொருட்களையும் சேர்க்கிறார்கள். இறுதியில் ஃபாண்டாவை சேர்த்து ஆம்லெட்டை சூடு செய்து அது பரிமாறப்படுகிறது. 


 



இந்த வீடியோ யூடியூபில் சுமார் 90 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோவை பெண் ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதை பதிவிட்டு, "அங்கு ஃபாண்டாவை வைத்து முட்டையை சமைக்கின்றனர். என்னை அங்கே கூட்டிட்டு போங்க அம்மா" எனப் பதிவிட்டுள்ளார். 






ஃபாண்டா குளிர்பானம் வைத்து ஆம்லெட் தயாரிப்பது அனைவருக்கும் பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சூரத் பகுதியில் மற்றொரு கடையில் கோகோகோலாவை வைத்து ஆம்லெட் போட்டு வருகிறார்கள். அவர்களுக்கு போட்டியாக இந்தக் கடையில் ஃபாண்டா பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் இந்த உணவின் விலை தான் தற்போது பலரும் அதை வாங்க முடியாமல் இருக்கும் வகையில் அமைந்துள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


லாக்டவுன் நேரத்தில் பலரும் பலவகையான உணவுகளையும், பல விதமான ரெசிப்பிகளையும் ட்ரை செய்து அதை தங்களின் சமூகவலைதளங்களில் பதிவேற்றினர் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டல்கோனா காபி, சாக்லேட் பிரியாணி போன்ற ரெசிப்பிகள் கூட லாக்டவுன் காலகட்டத்தில் களைகட்டியது. உணவுப்பிரியர்களான இந்தியர்கள், பல வகையான ரெசிப்பிகளை சளைக்காமல் ட்ரை செய்து வீடியோ பதிவேற்றி வருகிறார்கள். மற்றொரு புறம் இந்த ஆம்லெட்டிற்கு எதுக்கு 250 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பலர் கமெண்ட்டை பதிவு செய்து வருகின்றனர்.  


மேலும் படிக்க:மிட்நைட்டில் நடுரோட்டில் நாட்டியமாடிய இளைஞர்.. கடுப்பான போலீஸ் : வைரல் வீடியோ !