பொதுவாக மக்கள் சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாநில காவல்துறையும் அவ்வப்போது எச்சரிக்கை விடுப்பது வழக்கம். இத்தனை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஆகியவை இருந்தும் பலர் தவறு செய்துதான் வருகின்றனர். அப்படி ஒருவர் செய்த தவறை சுட்டுக்காட்டி மீண்டும் காவல்துறையினர் ஒரு எச்சரிக்கை வீடியோவை பதிவிட்டுள்ளனர். 


தெலங்கானா மாநிலம் சைபராபாத் போக்குவரத்து காவல்துறை சார்பில் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில் நள்ளிரவில் ஒரு நெடுஞ்சாலை பகுதியில் ஒரு நபர் சாலை கடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் மீண்டும் அவர் திரும்பி வந்து சாலையில் நின்று நடனமாடும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பதிவு செய்து ஒரு எச்சரிக்கை பதிவையும் செய்துள்ளது. அதில், "சாலையில் விளையாட்டிற்காக கூட இந்த மாதிரியான ஸ்டண்டுகள் மற்றும் நடனம் ஆகியவற்றை செய்யாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளது. 






இந்த நபர் அப்பகுதியில் உள்ள துர்கம் செர்வு கேபிள் பாலத்தில் இரவு இந்த நடனத்தை செய்துள்ளார். சைபராபாத் பகுதி போக்குவரத்து காவல்துறையின் பதிவிற்கு பலரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்று அக்கரை இல்லாமல் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை சைபராபாத் காவல்துறையினர் கடந்த 5-ஆம் தேதி பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது. 






 










இவ்வாறு சைபராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: ’அம்மாவுடைய பேரும் இருக்கலாம்..!’ - டெல்லி உயர்நீதிமன்றம் அசத்தல்