1. வெங்கையா நாயுடு ( ஜூலை 1-ந் தேதி)


இந்தியாவின் குடியரசுத் துணைத்தலைவரான வெங்கையா நாயுடு 1949ம் ஆண்டு ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சவடபலேம் என்ற கிராமத்தில் பிறந்தார். சட்டப்படிப்பை முடித்த இவர் அரசியலில் பல்வேறு உயர்வுகளை கடந்து தற்போது நாட்டின் குடியரசுத்துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இன்று அவருக்கு 73வது பிறந்தநாள் ஆகும்.



  1. கல்பனா சாவ்லா ( ஜூலை 1)




இந்திய விண்வெளித்துறைக்கு மகுடமாகவும், இந்திய பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்கும் கல்பனாசாவ்லா பிறந்த நாள் இன்று ஆகும். விண்வெளித்துறையில் அளப்பரிய சாதனை படைத்த கல்பனா சாவ்லா இந்தியாவின் பஞ்சாபில் பிறந்தவர். நாசாவில் பணியாற்றி விண்வெளி விபத்தில் வானிலே உயிரிழந்தார்.



  1. அகிலேஷ் யாதவ் ( ஜூலை 1)


இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ்வின் 49வது பிறந்தநாள் இன்று ஆகும்.



  1. ஹர்பஜன்சிங் ( ஜூலை 3)


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் இதே மாதம் 3-ந் தேதி பிறந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அளப்பரிய சாதனை படைத்த ஹர்பஜன்சிங்கிற்கு இந்த மாதம் 42வது பிறந்தநாள் பிறக்கிறது.



  1. பி.வி.சிந்து ( ஜூலை 5)




பேட்மிண்டன் உலகில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவரும், இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற பெருமை கொண்டவருமான பி.வி.சிந்து ஜூலை மாதம் 5-ந் தேதி 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.



  1. ரன்வீர்சிங் ( ஜூலை 6)


பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும், இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகருமான ரன்வீர்சிங் தன்னுடைய 36வது பிறந்தநாளை இந்த மாதம் கொண்டாடுகிறார்.



  1. எம்.எஸ்.தோனி ( ஜூலை 7)


கிரிக்கெட் ஜாம்பவான், உலககோப்பை தாகத்தை தீர்த்தவர், கேப்டன்களின் கேப்டன் என்று இந்தியா கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை படைத்த எம்.எஸ்.தோனி இந்த மாதம் பிறந்துள்ளார். அவரது 41வது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.





  1. சவ்ரவ் கங்குலி ( ஜூலை 8)


பி.சி.சி.ஐ.யின் இன்றைய தலைவரும், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய முகத்தை அளித்தவருமான அதிரடி மற்றும் ஆக்ரோஷ கேப்டன் சவ்ரவ் கங்குலியும் இதே மாதம்தான் பிறந்துள்ளார். அவரது 50வது பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.



  1. ராஜ்நாத்சிங் ( ஜூலை 10)


நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜ்நாத்சிங் இந்த மாதம்தான் பிறந்துள்ளார். அவரது 71வது பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.



  1. ஷிவ்நாடார் ( ஜூலை 14)




இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், தமிழ்நாட்டின் நம்பர் 1 பணக்காரருமாகிய ஷிவ் நாடார் இதே மாதம்தான் பிறந்துள்ளார். அவரது 77வது பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.



  1. கத்ரீனா கைப் ( ஜூலை 16)


பாலிவுட்டின் பிரபல நடிகையும், இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டவருமான கத்ரீனா கைப்பின் 39வது பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.



  1. பிரியங்கா சோப்ரா (ஜூலை 18)


கோலிவுட்டில் அறிமுகமாகி பாலிவுட்டில் கலக்கி ஹாலிவுட்டில் அசத்தி வரும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் 40வது பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.



  1. நடிகர் சூர்யா ( ஜூலை 23)




தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், நற்பணி நாயகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சூர்யாவின் 47வது பிறந்தநாள் இந்த மாதம் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.



  1. துல்கர் சல்மான் ( ஜூலை 28)


தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகர் துல்கர்சல்மான். இவரது 36வது பிறந்தநாள் இந்த மாதம் 28-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.



  1. சஞ்சய் தத் ( ஜூலை 29)


இந்திய திரையுலகின் பிரபல நடிகரான சஞ்சய்தத் தன்னுடைய 63வது பிறந்தநாளை இந்த மாதம் கொண்டாட உள்ளார்.



  1. சோனு சூட் ( ஜூலை 30)




பிரபல பாலிவுட் நடிகரும், கொரோனா பேரிடர் காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தனி ஆளாக உதவியவருமான நடிகர் சோனுசூட் தன்னுடைய 49வது பிறந்தநாளை இந்த மாதம் கொண்டாட உள்ளார்.


ஜூலை மாதம் பிறந்த பிரபலங்கள் அனைவருக்கும் ஏபிபி நாடு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண