மக்களிடையே சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த உடன் போலி செய்திகள் பரவுவது மற்றும் அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. ஒரு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் போது அதில் நல்லது மற்றும் கேட்டது ஆகிய இரண்டும் உள்ளது. அப்படி இந்த சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக போலி செய்திகள் அதிகரிப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
இந்நிலையில் அந்த வகையில் தற்போது பழைய போலி செய்தி ஒன்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் செய்தி தகவல் தொடர்பு ஆணையமான பிஐபி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு சிலருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், “மத்திய அரசு இந்தியாவிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் தருவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியுடன் இதற்கு விண்ணப்பிக்க இந்த செயலியில் உங்களுடைய மொபைல் எண்ணை பதிவிடுக என்று கூறி ஒரு லிங்க் அனுப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை. மத்திய அரசு இப்படி திட்டம் ஒன்று செயல்படுத்தவில்லை. இப்படி செயல் திட்டம் செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது முற்றிலும் தவறான ஒன்று. இது போன்ற லிங்க்களை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன் உள்ளிட்டவற்றில் இணையதள சேவையை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த குறுஞ்செய்தி ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வலம் வந்துள்ளது. தற்போது மீண்டும் இதே செய்தி வலம் வர தொடங்கியுள்ளது. ஆகவே மக்கள் இது போன்ற போலி செய்திகளைல் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக நமக்கு தெரியாத நபர்களிடம் வரும் லிங்க்களை நிச்சயம் தொடக் கூடாது. அத்துடன் மேலும் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லாமல் வெளியே இருந்து வரும் செயலிகளை நிச்சயம் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்ற ஆலோசனையும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்