புதிய மருத்துவ மாணவர்களுக்கு பாரம்பரிய ஹிப்போக்ரட்டிக் முறையிலான சத்தியப் பிரமானத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் உள்ள சாரகா முனிவரின் சொற்களைக் கொண்டு சத்தியப் பிரமாணம் செய்வித்ததால் மதுரை மருத்துவக் கல்லூரியின் தலைவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 1) அன்று நீக்கப்பட்டார்.


தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, டீன் மருத்துவர் ஏ.ரத்தினவேல், மேலதிகத் தகவல் எதுவும் தரப்படாமல் "காத்திருப்போர் பட்டியலில்" வைக்கப்பட்டார்.


மருத்துவக் கல்வி மற்றும் நடைமுறைகளுக்கான கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவ ஆணையம் (NMC) பிப்ரவரி 7ம் தேதி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஹிப்போக்ரடிக் உறுதிமொழியை "சரக் ஷபத்" என்கிற சமஸ்கிருத உறுதிமொழியாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்ததை அடுத்து சர்ச்சை தொடங்கியது.


சில மருத்துவ பயிற்சியாளர்கள் இந்த திட்டத்தை வரவேற்றாலும், நவீன மருத்துவர்களின் தேசிய பிரதிநிதித்துவ தளமான இந்திய மருத்துவ சம்மேளனம் (IMA) இந்த விஷயத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் எடுத்துச் சென்றது.


IMAன் அதிகாரப்பூர்வ வெளியீடான IMA செய்தியில் வெளியிடப்பட்ட கடிதத்தில், சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் சகஜானந்த் பிரசாத் சிங், பிப்ரவரி 21 அன்று IMA பிரதிநிதிகள் குழுவுடனான "கலந்தாலோசனைக் கூட்டத்தில்" மாண்டவியா "சாரக் சபத் விருப்பத்த் தேர்வாக இருக்கும் ஹிப்போக்கிரட்டிக் உறுதிமொழியை மாற்றத் தேவையில்லை" என்றும் உறுதியளித்துள்ளார்.


அதைத் தொடர்ந்து, மார்ச் 29 அன்று மாநிலங்களவையில், "ஹிப்போக்ரடிக் சத்தியப் பிரமாணத்தை சாரக் ஷபத் மூலம் மாற்ற அரசாங்கம் உத்தேசித்திருக்கிறதா" என்ற கேள்விக்கு பதிலளித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார்  “அரசு தெரிவித்தபடி மருத்துவ ஆணையம் (என்எம்சி), ஹிப்போகிரட்டிக் பிரமாணத்தை சரக் ஷபத் மூலம் மாற்றும் திட்டம் எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.


இருப்பினும் சில நாட்களுக்குப் பிறகு, 31 மார்ச் அன்று, "இளங்கலைப் பாடத்திட்டத்திற்கான புதிய திறன் அடிப்படையிலான மருத்துவக் கல்வியை அமல்படுத்துதல்" என்ற சுற்றறிக்கையை தேசிய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டது, அதில் கூறியபடி: "மருத்துவப் படிப்புக்கு ஒரு விண்ணப்பதாரர் அறிமுகப்படுத்தப்படும்போது மாற்றியமைக்கப்பட்ட 'மகரிஷி சரக் ஷபத்' அவர்களுக்கு உறுதிமொழியாகப் பரிந்துரைக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


சுவாரஸ்யமாக,நாட்டின் முதன்மையான சுகாதார நிறுவனமான AIIMSல் இளங்கலை பட்டதாரிகள் தங்கள் வருடாந்திர பட்டமளிப்பு விழாவின் போது சரக் உறுதிமொழியை பல ஆண்டுகளாக எடுத்து வருகின்றனர் என்பது இங்கே கவனிக்க வேண்டியது.


எய்ம்ஸின் முன்னாள் இயக்குநரான டாக்டர் எம்.சி.மிஸ்ரா, 2013ம் ஆண்டு பொறுப்பேற்ற போது, ​​சரக் ஷபத் ஏற்கனவே வருடாந்திர பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறியிருந்தார்.


சரக் ஷபத் என்ன சொல்கிறது: “சுயத்திற்காக அல்ல; எந்தவொரு உலக பொருள் மீதும் கொண்ட ஆசை அல்லது ஆதாயத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல, ஆனால் துன்பப்படும் மனிதகுலத்தின் நன்மைக்காக மட்டுமே, நான் என் நோயாளிக்கு சிகிச்சையளித்து சிறந்து விளங்குவேன்” எனக் கூறுகிறது.