தமிழ்நாடு :
- அ.தி.மு.க. ஒருங்கிணைப்பளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு
- ஒமிக்ரான் வைரஸ் தொற்று குறித்து பெரிதாக அச்சப்பட வேண்டிய அவசியமில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- திருச்சி, மணப்பாறையில் 3 மணிநேரத்தில் 27 செ.மீ, மழைப்பொழிவு – ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு 700 குடியிருப்புகள் தனித்தீவானது
- மயிலாடுதுறையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தி நபர்களுடன் எதிர்தரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு
- தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்பது வதந்தி – அமைச்சர் சக்கரபாணி
- மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் மறைக்கப்படுகிறது – தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டில் விரைவில் பலூன் பயண சுற்றுலா தொடங்கப்படும் – தமிழக அமைச்சர் மதிவேந்தன்
இந்தியா :
- நாகாலாந்தில் 14 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் – நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம்
- மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
- இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின் ரஷ்ய அதிபர் புதினுடன் சற்றுமுன் சந்திப்பு
- மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் – ரஷ்ய அமைச்சர் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
- அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், மத்திய அமைச்சர்கள் மரியாதை
- ரூபாய் 200 கோடி முறைகேடு தொடர்பான புகாரில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டோவிடம் விமான நிலையத்தில் தொடர் விசாரணை
உலகம் :
- மியான்மர் நாட்டின் ஆங் சான் சூ கிக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்தது அந்த நாட்டு நீதிமன்றம்
- டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் மோசமானது அல்ல – அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோகர்
விளையாட்டு :
- நியூசிலாந்திற்கு எதிராக மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
- தொடர்ந்து 14வது முறையாக உள்நாட்டில் டெஸ்ட் தொடரை வென்று மாபெரும் சாதனை
- உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு வெள்ளிப்பதக்கம்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்