மேற்கு  வங்கத்தில் சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சராமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர். அமாலாக்கத்துறை அதிகாரிகள் வந்த வாகனங்கள் மீது கற்களையும் செங்கல்லையும் வீசி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த தாக்குதலை அடுத்து சோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளுக்கு வழங்குவதற்காக வந்த உணவு தானியத்தில் 30 சதவீதம்  வெளிச்சந்தைக்கு திருப்பிவிட்டதாக புகாரின் அடிப்படையில், ரேசன் திட்டம் தொடர்பாக பல மாதங்களாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 


 






மாநில உணவுத் துறை அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் இந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடக்த்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.  அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷாஜகான் ஷேக்கின் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  ​​நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அந்த இடத்தில் கூடி முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளைத் தாக்கியது மட்டுமல்லாமல் அவர்களின் வாகனத்தையும் உடைத்துள்ளது. ஷஜகான் ஷேக் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தார்களா இல்லையா என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை.


அமலாக்கத்துறை  அதிகாரிகள் தாக்கப்பட்டது மட்டும் இல்லாமல் அவரகளது வாகனம் சேதப்படுத்தப்பட்டது.  இந்த நிகழ்வுகளை செய்தியாக்க களத்தில் இருந்த ஊடகங்கவியலாளர்களும் தாக்கப்பட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓட வேண்டியிருந்தது," என்று சம்பவ இடத்திற்கு அருகில் குடியிருந்த ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத்துறை அதிகாரிகளை நடவடிக்கையை கைவிட்டு கொல்கத்தா திரும்பும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. 


அமாலாக்கத்துறையினர் மீதான தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் பேசிய  மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், " அமலாக்கத்துறை சோதனை நடத்திய அனைவர் மீதும் புகார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அமலாக்கத்துறை  நடவடிக்கை எடுப்பது இயற்கையானது. இது மிகவும் வெளிப்படையானது. மேற்கு வங்கத்தில் அமாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல்  மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கின் நிலையைக் காட்டுகின்றது” எனக் கூறியுள்ளார்.