ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கடன் மோசடி செய்த வழக்கில், ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்த்துறை முடக்கி நடவடிகை மேற்கொண்டுள்ளது.
தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான உயர்ந்த இந்நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது. இது விமானத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த நிறுவன பங்குகளும் பெரும் வீழ்ச்சி கண்டது. இதனால் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்நிறுவனம் விமான சேவையை நிறுத்தியது.
இதனிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 2021 ஆம் ஆண்டு ஜாலான் - கால்ராக் வாங்கியது. இப்படியான நிலையில் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா ஆகியோர் கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மே மாதம் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சிபிஐ வெளியிட்ட அறிக்கையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்களிடம் இருந்து கடன்களை பெற்று நிறுவனத்திற்காக அல்லாமல் வேறு விஷயங்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ரூ.1,152 கோடி வாங்கி விட்டு அதில் ரூ.420 கோடி எந்தவித சம்பந்தமும் இல்லாத நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் நரேஷ் கோயல் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதில், இந்த வழக்கு விசாரணைக்காக மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்காக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்றார். பல நேர மணி நேர விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டார். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் பெற்று ஏமாற்றிய வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.நரேஷ் கோயலுக்கு சொந்தமான 17 பங்களாக்கள், வணிக வளாகங்கள், லண்டன் மற்றும் துபாயில் உள்ள சொத்துகள் இதில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும்: ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு