சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-21 இன் ஐந்தாவது சுற்றின் விரிவான கண்டுபிடிப்புகளின்படி, பணியில் இருக்கும் பெண்கள் நவீன கருத்தடைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அறியப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சுருக்கமான  அறிக்கை வெளியிடப்பட்டது. வேலையில் இருக்கும் பெண்களில் 66.3 சதவிகிதம் பேர் நவீன கருத்தடை முறையைப் பயன்படுத்துகின்றனர் என்றும், பணிக்குச் செல்லாதவர்களில் 53.9 சதவிகிதம் பேர் பயன்படுத்துகின்றனர் என்றும் தரவு கூறுகிறது.


மேலும் சமூக-பொருளாதார முன்னேற்றம் கண்ட சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களில் கருத்தடை பயன்பாடு அதிகரிக்கிறது என்பதையும் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. 'குடும்பக்கட்டுப்பாடு முறைகளுக்கான தேவை' மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்களில் (11.4 சதவிகிதம்) அதிகமாகவும், அதிக வருமானம் உள்ளவர்களில் (8.6 சதவிகிதம்) குறைவாகவும் இருப்பதாக தரவு காட்டுகிறது. நவீன கருத்தடைகளின் பயன்பாடும் வருமானத்துடன் அதிகரிக்கிறது, குறைந்த பொருளாதாரப் பிரிவில் உள்ள பெண்களில் 50.7 சதவிகிதத்தில் இருந்து 58.7 சதவிகிதமாக பெண்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இந்தியாவில் கருத்தடை முறைகள் பற்றிய அறிவு முன்னேறியிருக்கிறது என்று தரவு காட்டுகிறது - தற்போது திருமணமான பெண்கள் மற்றும் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட ஆண்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு நவீன கருத்தடை முறையை அறிந்திருக்கிறார்கள். இருப்பினும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு நவீன கருத்தடைகளின் பயன்பாடு 56.4% மட்டுமே.


"பெண்களில் கருத்தடை என்பது மிகவும் பிரபலமான கருத்தடை முறையாக உள்ளது என்பது கவலைக்குரிய விஷயம், குடும்பக் கட்டுப்பாட்டின் பொறுப்பு பெண்களின் மீது தொடர்ந்து விழுகிறது என்பதைக் காட்டுகிறது. பொது சுகாதார அமைப்பில் பிறப்பு-இடைவெளி (Birth gap) எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும், இனப்பெருக்க வயதுக்கு உட்பட்டு அதிக இளைஞர்கள் உள்ளனர், இது நமது மக்கள்தொகை வேகத்தில் 70 சதவிகிதத்துக்குப் பங்களிக்கிறது," என்று முத்ரேஜா கூறினார்.


நாடு தழுவிய கருத்தடை எண்ணிக்கைகள் ஊக்கமளிக்கும் அதே வேளையில், பரந்த பிராந்தியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் வேறாக உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஐந்து மாநிலங்கள்  ஒரு மக்கள்தொகை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும் அறிவியல்பூர்வமான விகித மாற்றநிலையை இன்னும்  அடையவில்லை . விகிதங்கள் அதளபாதாளத்தில் உள்ள மாநிலங்கள்  பீகார் (2.98 சதவிகிதம்), மேகாலயா (2.91), உத்தரபிரதேசம் (2.35), ஜார்கண்ட் (2.26) மற்றும் மணிப்பூர் (2.17) ஆகும்.


"நாட்டின் மிகப்பெரிய மக்கள்தொகை அளவு மற்றும் ஆழமான மக்கள்தொகை பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, மக்கள்தொகை மாற்றத்தின் வெவ்வேறு கட்டங்களைக் கடந்து செல்லும் மாநிலங்களுக்கு சூழல் சார்ந்த கொள்கை மற்றும் திட்டங்கள் தேவைப்படும்" என்று முத்ரேஜா கூறினார். “தரமான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள், கல்வி, திறன் கட்டுமானம் மற்றும் பாலின சமத்துவத்துக்கான முயற்சிகளை இளைஞர்களுக்கு வழங்குவதில் முதலீடுகளுக்கு நாடு முன்னுரிமை அளிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டில் ஆண் ஈடுபாட்டை ஊக்குவிக்க இது உதவும் என்பது அனுபவப் பூர்வமாக அறியமுடிகிறது” என முத்ரேஜா குறிப்பிட்டுள்ளார்.