இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காக மாணவர்கள் பலரும் வெளிநாடு செல்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்திய மாணர்கள் பலரும் மேற்படிப்பு படித்து வருகின்றனர்.  குறிப்பாக கனடாவில் கல்வி கற்கவும் வேலைவாய்ப்புக்காகவும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடா செல்கின்றனர். இதனால், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் எண்ணிகை அதிகம்.

  


”2030ஆம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் மாணவர்கள்"


இந்த  நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் 30,000 மாணவர்களை பிரான்ஸ் நாட்டில் படிக்க அனுமதிக்கப்படுவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நேற்று இந்தியா வந்தடைந்தார்.  இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய மாணவர்களுக்கு பரிசு அளிக்கும் விதமாக  சில சலுகைகளை அறிவித்திருக்கிறார். 


அதாவது, 2030ஆம் ஆண்டுக்குள் 30,000 மாணவர்களை பிரான்ஸ் நாட்டில் படிக்க அனுமதிக்கப்படுவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”2030ஆம் ஆண்டுக்குள் பிரான்சில் 30,000 இந்திய மாணவர்கள் இருப்பார்கள்.


இது என்னுடைய லட்சிய இலக்கு. இந்த லட்சியத்தை சாதிப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார். இந்தியாவுடனான பிரான்ஸின் உறவை வலுப்படுத்தும் வகையில், ஒரு பகுதியாக இந்த திட்டம் இருப்பதாக மேக்ரோன் தெரிவித்தார். 


”விசா செயல்முறையை எளிதாக்குவோம்"


இந்தியா மாணவர்களுக்கு பிரான்ஸ் நாடு எவ்வாறு உதவும் என்பது குறித்து விளக்கிய மேக்ரோன், "பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதிக்கும் வகையில் சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் பிரெஞ்ச் மொழியைக் கற்க புதிய மையங்களுடன் அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறோம்.






சர்வதேச  அளவில் வகுப்புகளை உருவாக்குகிறோம். இது பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும். பிரான்சில் படித்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கும் விசா செயல்முறையை எளிதாக்குவோம்" என்று மேக்ரோன் தெரிவித்துள்ளார்.


 மேலும், ”தற்போது எங்களிடம் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 35 பல்கலைக்கழகங்கள் உள்ளன.  இந்தியாவும் பிரான்சும் எதிர்காலத்தில் இணைந்து செய்ய வேண்டியது அதிகம்” என்றார். 


இந்திய மாணவர்கள் பிரான்சில் படிப்பதை எளிதாக்க பிரான்ஸ் அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், பிரான்சில் படிக்க ஆர்வமுள்ள இந்திய மாணவர்களுக்கு தகவல் மற்றும் ஆதரவை வழங்கும் "கேம்பஸ் பிரான்ஸ்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பிரான்சில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




 


மேலும் படிக்க


Watch Video: லோக்கல் டீக்கடைக்கு சென்று டீ குடித்த பிரதமர் மோடி! முந்திக்கொண்டு காசு கொடுத்த பிரான்ஸ் அதிபர்!


Republic Day: இன்று 75வது குடியரசு தினம்! டெல்லியில் தேசிய கொடியேற்றுகிறார் குடியரசுத் தலைவர்!